திருச்சி பழூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் சென்னையில் ஒரு மிகப் பெரிய கப்பல் கம்பெனியின் கணக்குத் துறையில் நல்ல நிலையில் பணிபுரிந்து வருகிறார். எந்த ஒரு கேள்விக்கும் தெளிவாக பதிலளிப்பார். சாப்பாட்டு பிரியரான அவர் அனைவரையும் பெயர் தெரியாத பல ருசியான உணவகங்களுக்கு கூட்டிச் செல்வார். கிண்டலும் கேலியுமாக தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் வேலையையும் தேன் உறியும் வண்டு போல் வாங்கிக் கொள்வார். அவருக்கடியில் பணிபுரிவதே ஒரு ஜாலியான அனுபவம் என்பது அலுவலகமே அறிந்த செய்தி.
அவருக்கு கீழ் பணிபுரிபவர்கள் அவரை “கே.கே.” என்று செல்லமாக அழைத்தனர். ஒரு வேலை பயிற்சிக்காக அமெரிக்காவிலிருந்து பயிற்சியாளர்கள் வந்தனர். அங்கே அவர் நுண்ணறிவையும் நிர்வாகத் திறனையும் கண்டு வியந்த அமெரிக்காவின் மூத்த மேலாளர் அவரை அமெரிக்கவிலேயே பணியமர்த்தக் கோரி ஒரு இமெயிலைத் தட்டினார். இரண்டு வருடத்திற்கு அமெரிக்காவில் பணிபுரிய சென்று பிடித்திருந்தால் அங்கேயே தொடரும் வாய்ப்பு கொடுத்ததும் சரி என்று தலையசைத்தார் கே.கே.
புதிய விஷயங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே உள்ள அவர் வரி சம்பந்தமான விஷயங்களை முதலில் அறிந்து கொள்ள விரும்பினார். தன் சிஏ மனைவி ராதிகாவிடம் அடிப்படையான சில தகவல்களை தெரிந்து கொண்டார். அதாவது, அமெரிக்காவில் இந்தியாவைப் போல் இல்லாமல் கணவன் மனைவி இணைந்து வரி தாக்கல் செய்யும் வசதி உள்ளது. அதாவது வரிதாரரின் விருப்பப்படி தனியாகவோ அல்லது துணைவருடன் இணைந்தோ (துணைவருக்கு வருமானம் இல்லாவிட்டலும்) வரி தாக்கல் செய்யலாம். வரிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள இருவருக்கும் சோசியல் செக்யூரிட்டி நம்பர் (எஸ்எஸ்என் SSN - Social Security Number) அல்லது இன்டிவியூவல் டேக்ஸ்பேயர் ஐடென்டிஃபிகேஷன் நம்பர் (Individual Taxpayer Identification Number (ITIN)) கட்டாயமாக இருக்க வேண்டும். ITIN இல்லாதபட்சத்தில் வரிப்படிவத்தோடு ITIN விண்ணப்பத்தையும் உடன் அனுப்ப வேண்டும் என்றார். சோசியல் செக்யூரிட்டி நம்பர்-ஐப் பற்றி ஒரு அளவுக்கு தெரிந்து வைத்திருந்தார் கே.கே ஆனால் அதை எப்படிப் பெருவது, முழுமையாக அதன் நடைமுறை என்ன என்பது பற்றி எல்லாம் விசாரித்தார்.
சோசியல் செக்யூரிட்டி நம்பர் என்றால் என்ன?
சோசியல் செக்யூரிட்டி நம்பர் என்பது அமெரிக்காவில் ஒரு நபரை அடையாளம் காண பயன்படுத்தப்படும் ஒரு ஒன்பது இலக்க எண். ஆரம்பத்தில் ஒரு நபரை அடையாளம் கண்டு சமூக பாதுகாப்பு வரி வரம்புக்குள் அவரை கொண்டு வரும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது என்றாலும், அதன் பயன்பாடு இப்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
சோசியல் செக்யூரிட்டி நம்பர் வகைகள்
சோசியல் செக்யூரிட்டி ஏஜென்சி (SSA) எனப்படும் அரசாங்க நிறுவனமே இந்த எண்களை வெளியிடுகிறது. சமூக பாதுகாப்பு அட்டைகள் மூன்று வெவ்வேறு வகையாக வழங்கப்படுகிறது. மிகவும் பொதுவான வகை, அட்டை வைத்திருப்பவரின் பெயர் மற்றும் எண் கொண்டு வரும். இத்தகைய அட்டைகள் அமெரிக்க குடிமக்கள் மற்றும் அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டது போக சமூக பாதுகாப்பு அட்டைகள் இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட வகையில் உள்ளன:
1) “வேலைவாய்ப்பு செல்லுபடியாகாது” (Not Valid For Employment )என்ற வார்த்தைகளை கொண்டு வரும் இத்தகைய சோசியல் செக்யூரிட்டி நம்பர் அட்டைகள் வைத்திருக்கும் நபர் அமெரிக்காவில் பணிபுரிய அங்கீகாரம் இல்லை எனக் குறிப்பிடுபவை.
2) Valid for work only with DHS authorization - இத்தகைய சோசியல் செக்யூரிட்டி நம்பர் அட்டைகள் வைத்திருக்கும் நபர் அமெரிக்காவில் பணிபுரிய ஹோம்லேன்ட் செக்யூரிட்டி துறை (Department of Homeland Security) துறையினர் அங்கீகாரத்துடன் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். இந்த அட்டைகள் அமெரிக்க தற்காலிகப் பணி அங்கீகாரம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
பொதுவாக அமெரிக்காவில் பணிபுரிய அங்கீகாரம் பெற்ற நபர்கள் மட்டுமே எஸ்எஸ்என் பெற விண்ணப்பிக்க முடியும். https://www.ssa.gov/forms/ss-5.pdf என்ற இணையதள இணைப்பில் SSN-கான விண்ணப்பம் உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து Social security Officeல் சமர்பிக்க வேண்டும் அல்லது தபால் அனுப்ப வேண்டும். https://secure.ssa.gov/apps6z/FOLO/fo001.jsp என்ற இணையதள இணைப்பில் எந்த அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தோடு குறிப்பிட்ட சில ஆவணங்களையும் இணைக்க வேண்டும். குடிவரவு அந்தஸ்து, வயது, அடையாளம் மற்றும் வேலைத்தகுதிக்கான அசல் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
1) குடிவரவு அந்தஸ்து மற்றும் அடையாளத்திற்கு ஆதாரமாக ஒப்புக்கொள்ளப்படுவன:
a) Form I-551(Immigrant VISA) மற்றும் பாஸ்போர்ட் (அல்லது)
b) I- 766 எனப்படும் Work permit (ஆல்லது)
c) I-94 எனப்படும் வரவு மற்றும் வெளியேற்றத்தின் பதிவு
2) வயதிற்கான அதாரமாக ஒப்புக்கொள்ளப்படுவன:
a) பிறப்புச் சான்றிதழ்
b) பாஸ்போர்ட்
c) DHS கொடுத்த சான்றிதழ்
12 வயதிற்கு மேல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் நேர்முகத்தேர்விற்குப் பின்னர் தான் SSN வழங்கப்படும். பொதுவாக ஒரே நாளில் எஸ்எஸ்என் அங்கீகரிக்கப்பட்டுவிடும். 2 வாரங்களில் அசல் எஸ்எஸ்என் அட்டை வழங்கப்படும்.
“பரவாயில்லையே! இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறாயே!” என்று மனைவியை சீண்டினார். ITINஐ பற்றி அடுத்த இதழில் காண்போம்.
http://www.vikatan.com/personalfinance/article.php?module=nanayam&aid=11062
No comments:
Post a Comment