5. மூலதன ஆதாய வரிக் குறைப்பு..!
ஆடிட்டர். G. கார்த்திகேயன், கோவை
துபாய் சுந்தரேசன் தனது மதுரை பூர்வீக வீட்டை மனைவி அபிதாவைத் திருப்திப்படுத்த விற்கத் திட்டமிட்டதையும், இந்த விற்பனையின் மூலம் ஏற்படும் மூலதன ஆதாயம் கணக்கிடப்படும் முறையையும் கடந்த வாரம் பார்த்தோம்.
மூலதன ஆதாயம் (Capital Gain) என்பது ஒரு சொத்தை விற்பதன் மூலம் ஏற்படும் லாபம். விற்ற விலைக்கும் வாங்கிய விலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கணக்கிடும் முறையை மீண்டும் ஒரு முறை காண்போம்
நமது உதாரணத்தின்படி
விற்ற விலை 1,50,00,000
கழிவு: பரிமாற்றச் செலவு (12,00,000)
வாங்கிய விலை (51,20,000)
மேம்பாட்டு செலவுகள் (3,50,000)
_________
மூலதன லாபம் 83,30,000
___________
முன்பே கூறியவாறு நீண்ட கால மூலதன லாபமாக இருக்கும்பட்சத்தில் 20% வரி செலுத்தவேண்டும். சுந்தரேசனின் ஆடிட்டர் அவ்வளவு வரியை எவ்வாறு குறைப்பது என்பது பற்றி கூறுகிறார்.
வரியைக் குறைக்கும் முறைகள்:
நீங்கள் மூலதன ஆதாயத்திற்கு விலக்கு கோர வருமானவரி சட்டத்தில் பல்வேறு விதிகள் உள்ளன. வீட்டுச்சொத்து விற்பனை மூலம் மூலம் ஏற்படும் லாபத்தை சமாளிக்கும் விதிகளை இந்த கட்டுரையில் பார்போம்.
அடிப்படையில், வருமான வரி சட்டத்தில் குடியிருப்புசொத்து விற்பனை தொடர்பாக 2 விதிகள் உள்ளன.
ஆடிட்டர். G. கார்த்திகேயன், கோவை
ஒன்று, நீங்கள் ஒரு குடியிருப்பு சொத்தை விற்று மற்றொரு குடியிருப்பு சொத்தை வாங்கும்போது இந்தச்சட்டப் பிரிவு பொருந்தும். இரண்டாவது
நீங்கள் குடியிருப்பு சொத்து அல்லாத நீண்ட கால சொத்தை விற்று ஒரு குடியிருப்பு சொத்தைவாங்கும்போது பொருந்தும்.
முதல் விதி : ஒரு குடியிருப்பு சொத்து விற்கப்பட்டு மற்றொரு குடியிருப்பு சொத்து வாங்கும் அல்லது கட்டும் போது.
இந்த நிலைக்கு தொடர்புடைய 54ம் பிரிவில், விற்கப்பட்ட குடியிருப்பு ஒரு நீண்ட கால மூலதனசொத்தாக இருக்க வேண்டும். (அதாவது 3 ஆண்டுகளுக்கு மேல்)
சொத்து விற்ற பின்னர், வரி செலுத்துபவர் விற்ற தேதிக்கு ஒரு வருடத்திற்கு முன் அல்லது விற்றதேதிக்குப் பின் இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு புதிய வீட்டை வாங்க வேண்டும். (அல்லது) வரிசெலுத்துபவர் மூன்று ஆண்டுகளுக்குள் புது வீட்டை கட்டி முடிக்க வேண்டும்.
இந்த விதியில் விலக்களிக்கப்பட்ட மூலதன ஆதாயத்தின் அளவு :
1) புதிய சொத்தின் விலை
2) மூலதன ஆதாயம்
இவற்றில் எது குறைவாக உள்ளதோ அதனை கழித்துக் கொள்ளலாம்.
ஒரு உதாரணத்திற்கு , சுந்தரேசன் விற்பனை தேதிக்கு ஒரு ஆண்டிற்கு முன் இந்தியாவில் ரூ.30லட்சத்திற்கு ஒரு புதிய வீட்டை வாங்கினார் என்று கருதிக் கொள்வோம். உதாரணத்தின்படிமூலதன ஆதாயம் ரூ.83.3 லட்சம். இந்த நிலையில் விலக்களிக்கப்பட்ட ஆதாயத்தின் அளவைக் கீழே காண்போம்.
மூலதன ஆதாயம் ரூ.83.3 லட்சம்
கழிப்பு : புதிய வீட்டின் விலை ரூ.30 லட்சம்
விலக்களிக்கப்பட்ட ஆதாயம் ரூ.30 லட்சம்
வரிக்குட்படுத்தப்படும் ஆதாயம் ரூ.53.30 லட்சம்
எனவே, சுந்தரேசன் ரூ..53.3 லட்சத்திற்கு 20% வரி செலுத்தினால் போதுமானது.
இப்போது அதே நிலைமையை கருத்தில் கொள்வோம். ஆனால் வாங்கிய சொத்தின் மதிப்பு ரூ.1கோடி இந்த நிலையில் விலக்களிக்கப்பட்ட ஆதாயத்தின் அளவைக் கீழே காண்போம்.
மூலதன ஆதாயம் ரூ.83.3 லட்சம்
கழிப்பு : புதிய வீட்டின் விலை ரூ.1 கோடி
விலக்களிக்கப்பட்ட ஆதாயம் ரூ.83.3 லட்சம்
வரிக்குட்படுத்தப்படும் ஆதாயம் ரூ.0
இதனில் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விதி, நீங்கள் பாக்கி இருக்கும் செலவிற்கு, வரிப் படிவத்தில் கழிப்போ அல்லது இழப்போ கோர முடியாது.
இதனில் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விதி, நீங்கள் பாக்கி இருக்கும் செலவிற்கு, வரிப் படிவத்தில் கழிப்போ அல்லது இழப்போ கோர முடியாது.
இரண்டாவது விதி : ஒரு குடியிருப்பு அல்லாத நீண்ட கால சொத்தை (உதாரணத்துக்கு வீட்டு மனை, விவசாய நிலம்) விற்று ஒரு புதிய வீட்டைக் வாங்குவது அல்லது கட்டுவது.
இந்த சூழ்நிலையிக்கு தொடர்புடையது 54F பிரிவு. 54F பிரிவின்படி, விற்ற சொத்து ஒரு குடியிருப்புஅல்லாத நீண்ட கால மூலதன சொத்தாக இருக்க வேண்டும்.
சொத்து விற்ற பின்னர், வரி செலுத்துபவர் விற்பனைக்கு ஒரு வருடத்திற்கு முன் அல்லதுவிற்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஒரு புதிய வீட்டை வாங்க வேண்டும். (அல்லது) வரிசெலுத்துபவர் மூன்று ஆண்டுகளுக்குள் சொத்துரிமை பெற்று புது வீட்டை கட்டி முடிக்க வேண்டும்.
இந்த விதியின் மிக முக்கியமான பகுதி, வரி செலுத்துபவர் வாங்கிய அல்லது கட்டிய புதிய சொத்துதவிர அவரது பெயரில் வேறு எந்த வீடும் இருக்கக் கூடாது என்பதுதான்.
இதற்கு மேல், இந்த திட்டங்களின் கீழ் வாங்கிய எந்த சொத்தையும் வாங்கும் தேதியிலிருந்து 3ஆண்டுகள் நிறைவடையும் முன் விற்கக் கூடாது.
மேலும் விற்றத் தொகையை ஒரு வங்கி கணக்கில் ஆதாய லாப தனிக் கணக்கில் டெபாசிட் செய்துஅதிலிருந்து தான் வீடு கட்ட மற்றும் வாங்க வேண்டும் என்பதும் ஒரு விதி முறை.
ஆகவே பல வகைகளில் மூலதன ஆதாய லாபத்தை குறைக்க வழி உள்ளது என்பதை அனைவரும்அறிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment