Sunday 4 October 2015

Capital Gains - NRIs

துபாயில் இருக்கும் சுந்தரேசன் தனது பூர்வீக சொத்தான வீட்டை விற்கலாம் என்று முடிவு செய்தார்என்ன தான் பச்சை பசேலென்றுஎப்போதும் விழாக் கோலம் கொண்டிருக்கும் மதுரையில்பரபரப்பு அதிகம் இல்லாமல் அமைதியான சூழ்நிலையில் ஊருக்கு சற்றே வெளியில் மாளிகை போன்ற வீடு இருந்தாலும்துபாயின் ஷாப்பிங் மால்களும்ஃபாரின் கார்களும்அகன்ற மெயின் ரோடுகளும் அதற்கு மேலாக மனைவி அபிதாவின் அன்பு தொல்லை காரணமாகவும் துபாயிலேயே வீடு வாங்கி செட்டில் ஆக முடிவு செய்தார்.

தரகரிடம் விசாரித்ததில் மதுரையில் உள்ள வீட்டை ரூ.1.5 கோடிக்கு விற்க முடியும் என்றார்.சுந்தரேசனுக்கு வாயெல்லாம் பற்கள். “வருமானவரி குறித்து எதுக்கும் ஆடிட்டரிடம் விசாரிச்சுக்கோங்க சார்” என்றார் தரகர்ஆடிட்டர், “வரும் மூலதன லாபத்தில் (Capital Gain) 20%வரி கட்ட வேண்டும்” என்றதும் சுந்தரேசனுக்கு மனக்கோட்டை இடிந்தே போனது.

முதலில் நாம் மூலதன லாபம் (Capital Gain) என்றால் என்ன என்பதனைக் காண்போம்.
ஒரு சொத்தை விற்பதன் மூலம் ஏற்படும் லாபம் மூலதன இலாபம் என்கிறோம்.

அதன் வகைகள்,

நீங்கள் ஒரு சொத்தை மூன்றாண்டுகளுக்கு மேலாக (36மாதங்கள்வைத்திருந்த பிறகு விற்றால் அதன் மூலம் வரும் லாபம் நீண்ட கால மூலதன லாபமாக (Long Term Capital Gain) எடுத்துக்கொள்ளப்படும்

36 மாதங்களுக்குள் விற்கப்படும் சொத்துகளின் மூலம் வரும் இலாபம் குறுகிய கால மூலதன லாபமாக (Short Term Capital Gain) எடுத்துக்கொள்ளப்படும்

சரிஆனால் “மூலதன ஆதாய லாபம்” என்பது என்ன?
மூலதன லாபம் எப்படி கணக்கிடுவது என்று பார்ப்போம்.

 
உதாரணத்துக்கு
விற்ற விலை xxxxxxxx
கழிவுபரிமாற்றச் செலவு xxxxxxxx
வாங்கிய விலை xxxxxxxx
மேம்பாட்டு செலவுகள் xxxxxxxx
_________
மூலதன லாபம் xxxxxxxx
_________
விற்ற விலை:
இதில் விற்ற விலையானது எப்போதுமே பத்திரத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.பத்திரத்தில் ஒரு விற்ற விலையும் (Fair Value) அரசு வழிகாட்டி மதிப்பு (Guideline Value) என்ற இணைப்பும் இருக்கும்வருமானவரி சட்டத்தின் 50C பிரிவின் படி விற்ற விலை அல்லது அரசின் வழிகாட்டி விலை ஆகிய இரண்டில் எது அதிகபட்சமானதோ அதுவே விற்பனை விலையாகக் கருதப்படும்.

நம் உதாரணத்தில் சுந்தரேசனது பத்திரத்தில் 50C மதிப்பு ரூ. 1.25 கோடிவிற்கிற விலை ரூ. 1.5கோடிஇதில் அதிகபட்சமான ரூ. 1.5 கோடி விற்ற விலையாக எடுத்துக்கொள்ளப்படும்.

பரிமாற்றச் செலவுகள்:
பரிமாற்றச் செலவுகளாக கருத்தில் கொள்ளக் கூடியவை உதாரணமாக தரகர் கமிஷன் போன்ற நேரடியாக ஒரு பரிமாற்றத்தில் தொடர்புடைய செலவுகள்.

சுந்தரேசன் தரகரருக்கு 12 லட்சம் கமிஷனாக கொடுத்தார்இதை பரிமாற்ற செலவாக வரிபடிவத்தில் கழித்துக்கொள்ளலாம்.
வாங்கிய விலை:
சொத்தை வாங்கிய விலைஅதை எப்படி அடைந்தோம்என்பதை பொறுத்து மாறும்அதற்கு கீழேயுள்ள சூழ்நிலைகளை ஆராய்வோம்.

  • பரிமாற்ற விலை:
அடைந்த முறை
விலை
நேரடியாக ஒருவரிடமிருந்து வாங்கிய சொத்து
விற்றவருக்கு கொடுத்த விலை (+) தரகர் கமிஷன் (+) முத்திரைக் கட்டணம் (Stamp Duty)
பரிசாக பெற்ற சொத்து
பரிசாக அளித்தவருக்கு மாற்றப்பட்ட விலை
பாகப்பிரிவினை மூலமாகவோ உயில் வழியாகவோ வந்த சொத்து
சொத்தின் முதல் உரிமையாளர் வாங்கிய விலை

  • நிகர மதிப்பு:
பண வீக்கத்தை கணக்கில் கொண்டுவிற்ற சொத்தை தற்காலம் வாங்கியிருந்தால் அதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்பதற்கு ஒவ்வொரு நிதியாண்டும் ஒரு பணவீக்க விகித எண்ணை நிர்ணயிப்பர்அதன்படி பரிமாற்ற விலையினை உயர்த்திக் காட்டலாம். 1981-82 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு பணவீக்க விகித எண் கணக்கிடப்படும்நிகர மதிப்பு என்பது

விற்ற ஆண்டின் பணவீக்க விகித எண்
பரிமாற்ற விலை X __________________________________________
வாங்கிய ஆண்டின் பணவீக்க விகித எண்

சுந்தரேசனுக்கு தன் அப்பாவின் உயில் மூலம் இந்த சொத்து வந்தடைந்ததுஅவருடையதந்தை 1972ல் 3.5 இலட்சம் ரூபாய்க்கு வீட்டை வாங்கினார். 1981ல் அதன் நிகர மதிப்பு 5இலட்சம் ரூபாயாக இருந்தது.

தற்போதய நிகர மதிப்பு ரூ. 5,00,000 x 1,024/ 100 = ரூ. 51,20,000
மேம்பாட்டு செலவுகள்:
உதாரணத்திற்கு சுந்தரேசன் வீட்டை விற்பதற்கு ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர்மொட்டைமேல்நிலை மாடி தொட்டி அல்லது சில மாற்றங்களை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.அதை மேம்பாட்டுச் செலவாக கழித்துக் கொள்ளலாம்மேம்பாட்டுச் செலவுகளுக்கும் நிகரமதிப்பு கணக்கிடப்படும்.

விற்ற ஆண்டின்
பணவீக்க விகித எண்
நிகர மதிப்பு மேம்பாட்டு செலவு X ____________________________
மேம்படுத்திய ஆண்டின்
பணவீக்க விகித எண்
வீட்டை விற்பதற்காக ஜனவரி 2014ல் மேல் தொட்டியையும்சுற்றுச்சுவரையும் இடித்துப்புதுபித்த்தற்காக ரூ. 3,21,000 இலட்சம் செலவழித்தார் சுந்தரேசன்.

அதன் தற்போதய நிகர விலை : 3,00,000 x 1024/939 = ரூ.3,50,000 ( தோராயமாக)

மூலதன ஆதாய இலாபம்:
முன்பு கொடுத்த விதிமுறையின் படி மூலதன ஆதாய இலாபம் என்பதுவிற்றவிலையிலிருந்து வாங்கிய விலை மற்றும் மேம்பாட்டுச் செலவுகளை கழித்தால்வருவது.

விற்ற விலை 1,50,00,000
கழிவுபரிமாற்றச் செலவு (12,00,000)
வாங்கிய விலை (51,20,000)
மேம்பாட்டு செலவுகள் (3,50,000)
_________
மூலதன லாபம் 83,30,000
_________

வரி விகிதம்:
பொதுவாக நீண்ட கால மூலதன இலாபம் (Long Term Capital Gain) 20% வரிக்குட்படுத்தப்படும்.

நம் உதாரணத்தின்படி வரிப்பணம் 83,30,000 x 20% = ரூ. 16,66,000

அடிப்படை வருமான விலக்கு:
நீண்ட கால மூலதன வருவாய் (Long Term Capital Gain) இருக்கும் பட்சத்தில் அடிப்படை வருமானவிலக்கு (Basic Exemption Limit – 2,50,000) என்பது இல்லைவரும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரிசெலுத்த வேண்டும்.

 
இவ்வளவு வரி கட்ட வேண்டாம் என்றால் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தசுந்தரேசனுக்கு அருமையான பல வழிகளை ஆடிட்டர் கூறினார்அவர் அப்படி என்னதான்கூறினார் என்பதை அடுத்த இதழில் பார்போம்.

No comments:

Post a Comment