Thursday 10 October 2013

Use of Right Income Tax Return Form for The Assessment Year 2013-14

Government has come out with modifications in filing the tax returns based on the income that you earn. This is applicable for the tax returns form the Assessment year 2013-14 relating to the financial year 2012-13. Below are some of the tips for selecting the correct ITR forms. 

ITR-1 Form: -
When to use ITR-1 Form?
ITR–1 Form can be used by an Individual having income from following sources:
  •  Income from Salary/ Pension, One House Property (not having brought forward losses from previous years) and Other Sources (not being income from lottery or race horses) such as Interest Income.
  • In case any income of spouse, minor child, etc. gets clubbed with the income of the assessee, then ITR–1 can be used only if the clubbed income falls into the above source of income
When not to use the ITR–1 Form?
ITR–1 Form can not be used by an Individual if his total income consists of:
  • Income from more than one house property
  • Income from Winnings from lottery or income from Race horses
  •  Income (not exempt from tax) under Capital Gains 
  •  Income exceeding Rs. 5,000 from agricultural business 
  •  Income from Business or Profession
  • 'Income from stock & equity mutual funds
  • Losses which has to be carried forward
  • Person claiming relief under section 90, 90A or 91 for foreign tax paid
  • An individual who is a resident having assets (including financial interest in any entity) located outside India or signing authority in any account located outside India
  • Person having or declared Foreign Financial Asset.
ITR-2 Form:-
When to use ITR-2 Form?
 ITR 2 can be used by an individual or a Hindu Undivided Family (not having Income from business or Profession) whose total income comprises following income:
  • Income from Salary / Pension
  • Income from House Property
  • Income from Capital Gains
  • Income from Other Sources (including income from Winning from Lottery and Race Horses)
Moreover, if the income of spouse, minor child, etc. is to be clubbed with the income of the assessee, then ITR 2 can be used only if such income falls in any of the above categories.
When not to use ITR-2 Form?
 ITR 2 is not used by
  •  An Individual/ HUFs if his total income includes any income taxable under the head “Profit or Gain from Business or Profession. In other words, business or professional income does not form the part of ITR-2
  • The person already using ITR-1 Form. 
ITR-3 Form:-
When to use ITR-3 Form?
A person being an Individual or HUFs who is a partner in a firm shall use ITR-3 form whose income chargeable to income-tax under the head “Profits or gains of business or profession” should not include any income except the income stated below:
  •  Interest 
  •  Salary
  • Bonus
  • Commission or
  • Remuneration
By whatever name called, due to, or received by Individual or HUF from such firm.


ITR-4 Form:-
When to use ITR-4 Form?
ITR-4 Form can be used by an Individual or HUF who is carrying out a proprietary business or profession and who are not filing Return under Presumptive Taxation Scheme. The following income can be included in ITR-4 form:
  • Income from Salary/Pension
  • Income or Losses from House property
  • Income from Business Profession
  • Income or Losses from Capital gains
  • Income or Losses from Other Sources
Moreover, every Partnership firms, Individuals & HUF are required to be audited u/s 44AB is required to file their ITR-4 Electronically using digital signature.

When not to use ITR-4 Form?
  •  An Individual or a HUF computing business income from Presumptive Taxation Scheme are not eligible to file ITR-4. For Presumptive Business Income, an assessee files ITR-4S (SUGAM).

ITR-4S FORM:-
For Presumptive Business Income an assessee needs to file his return using ITR-4S Form (commonly known as SUGAM).

When to use ITR-4S Form?
ITR-4S Form is applicable on Individuals, HUFs & small business taxpayers deriving income from
  • Business income where Presumptive scheme under section 44AD & 44AE of the Act is used for computation of business Income
  •  Salary/Pension
  • One House Property
  • Other Sources
Moreover, in case any income of spouse, minor child, etc. gets clubbed with the income of the assessee, then ITR-4S can be used only if the clubbed income falls into the above income source. Also, the above income will be deemed to be computed after considering every losses, allowances, depreciation, etc.

When not to use ITR-4S Form?
ITR-4S is not applicable if income is derived from
  •  More than one House Property 
  •  Winning from lotteries/horse races
  • Capital gains not exempt from tax
  • Agricultural Business in excess of Rs. 5000
  • Speculative Business
  • Losses to be carried forward 
ITR-5 Form:-
When to use ITR 5 Form?
·         The form can be used by a person being a -
  •        Firms
  •       AOPs (Association of persons),
  •       BOIs (Body of individuals) 
  •       LLP (Limited Liable Partnership) 
When not to use ITR 5 Form?
·         The form should not be used by a person being an-
  •  Individual
  • HUFs
  • Company
  • And to those persons to whom ITR-7 is being applicable.

ITR-6 Form:-
ITR-6 can be used by a company, other than a company claiming exemption under section 11.
 
ITR-7 Form:-
ITR 7 Form can be used by persons including companies who are required to furnish return under
  • Section 139(4A) : Filing return by charitable/Religious trust 
  • Section 139(4B) : Filing return by political party
  • Section 139(4C) : Filing return by certain Institutions 
  •  Section 139(4D) : Filing return by Scientific Research University

Changes in the details to be given in the Income Tax Return Form for the AY 2013-14 relating to the Financial year 2012-13:-

  1. Tax Audit Report Filing : The filing of audit reports was made mandatory in ITR Form 5, 6 and 7.
  2. Loss from Other Sources: Income-tax Return in the SAHAJ Form (ITR-1) should not have any loss under the head Income from Other Sources. If assessee has such loss then he can use ITR-4.
  3. DTAA relief: The SAHAJ Income-tax Return form also cannot be used by an individual claiming any double taxation tax relief under sections 90 or 90 A or 91 of the Income-tax Act, 1961
  4. IT PAYABLE <Rs.5,000: The new amendment also comes with the stipulation that whose income tax payable is less than Rs. 5,000, he cannot file ITR-1(SAHAJ) Form.
  5. Mandatory E-filing : It is now compulsory for persons having income in excess of Rs. 5 lakhs for the Assessment Year 2013-14 to file their Income-tax Return in the Electronic Form except charitable trusts and educational institutions etc.
  6. Details of Assets & Liabilities: A new “Schedule AL” which is introduced in ITR 3 & ITR 4 details of Assets & liabilities of an individual or HUF and It is applicable when the income of the individual or HUF exceeds Rs. 25 lakhs.
  7. Electronic submission of Audit Report:The new amendment provides that where the assessee is required to furnish a report of Audit as per section 115AB or 92E or 115JB of the Income-tax Act, 1961, then such audit report shall be furnished electronically with the Income-tax Return.
You may feel free to utilize our services in tax preparation and seek tax related advice from us. Visit www.gkmtax.com or www.gkmtaxzone.com for more details.

Tuesday 8 October 2013

What's happening in US? A Detailed Discussion

அமெரிக்காவில் நடப்பது என்ன? ஓரு விரிவான அலசல்

- ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், கோவை


ஏதோ இருத்தரப்பினர் சண்டையால் நம்மூரில் கடைகள் கதவடைப்பு செய்யும் நிலை போல இன்று அமெரிக்கா இருக்கிறது. உலக நாடுகளின் மூத்த அண்ணன் என்று கருதப்படும் அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், தேசிய பொழுதுப்போக்கு பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள் போன்றவை அக்டோபர் முதல் தேதியிலிருந்து இழுத்து மூடப்பட்டன. இதற்கு கூறப்படும் காரணம் அமெரிக்காவின் பட்ஜெட் அவசரநிதி மசோதாவிற்கு எதிர்கட்சிகள் ஒப்புதல் தர மறுத்தது.

இந்தியாவில் லோக்சபா, ராஜ்யசபா என்கிற இரு அவைகள் இருப்பது போல அமெரிக்காவில் காங்கிரஸ் மற்றும் செனட் என்ற அவை அமைப்புகள் உள்ளன.

இந்தியாவின் நிதி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ளது போல் அமெரிக்காவின் நிதி ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல்  தேதிக்கு முன்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.   அமெரிக்காவில் அதிபர் ஒபாமா ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி (Democratic Party) இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கேடு நெருங்கிய தருவாயில் எதிர் கட்சியான குடியரசு (Republic) கட்சி ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டனர்.

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், கோவை
இதற்கு எதிர் கட்சி கூறும் காரணம் என்ன?
அதிபர் ஒபாமா அமெரிக்காவில் உள்ள சாதாரண மக்களுக்கும், வயதானவர்களுக்கும் எளிமையான மருத்துவ வசதி செய்யும் வகையில் ஒபாமாகேர் என்ற காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அமெரிக்காவில் மருத்துவ செலவு என்பது இன்ஷூரன்ஸ் இல்லாமல் பணக்காரராக இருந்தாலும் கூட சமாளிக்க முடியாத ஒன்று என்று உலகறிந்த விஷயம்.

ஒபாமா ஆட்சி பொறுப்பு ஏற்றதும் தனது முக்கியப் பணியாக இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் திருத்தங்கள் செய்து சாமானிய மனிதனுக்கும், முன்னுரிமை தந்து காப்பீடு அளிக்கும் வகையில் அரசு நிதி ஒதுக்கீட்டில் வழி செய்துள்ளார். ஆனால் பணக்காரர்களுக்கு சாதக கட்சியான குடியரசு கட்சி (Republic Party) ஆரம்ப முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த சுகாதார பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்திற்கும் சேர்த்து பட்ஜெட்டில் அவசர நிதி மசோதாவை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒபாமா அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அவசர நிதி மசோதாவை ஒப்புதல் அளிக்காமல் எதிர் கட்சிகள் புறக்கணித்தன. இதனால், எல்லை பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, உணவுத்துறை போன்ற அத்தியாவசிய செலவுகளை தவிர மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து செலவுகளும் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


உலக நாடுகளில் ஏற்படும் போர்களின் மூலம் பெரும் வருவாயை ஈட்டும் அமெரிக்கா ஒரு சண்டை பொருளாதார (War Economy) நாடாக இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

சிரியாவின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரியுள்ள நிலையில் ஒபாமா அதற்கு இணக்கம் தெரிவிக்காதலால் அவருடைய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை பட்ஜெட்டில் சேர்க்காமல் எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்று பலர் கருத்து கூறுகின்றனர். .

அமெரிக்கா வரலாற்றில் இதற்கு முன் 1995– ல் கிளிண்டன் ஆட்சியில் நடந்த கதவடைப்பின் போது கூட பொருளாதாரம் இந்த அளவுக்கு சீர்க்கெட்டு இருந்த்து இல்லை.

இந்தியாவில் இந்த நிலை ஏற்படுமா?

இந்தியாவிலும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால்தான் அடுத்த ஆண்டிற்க்கான செலவை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் இங்கு சில வித்தியாசங்கள் உள்ளன.

இந்திய அரசியல் சாசனப்படி மத்திய அரசு பெறும் வரவுகள் மற்றும் பெறும் கடன்கள் அனைத்தையும் Consolidated Fund of India என்கிற கணக்கில் போடப்படும். அரசாங்கம் இந்தப் பணத்தை எடுக்க பாராளுமன்ற ஒப்புதல் பெற்று அரசு செலவுகளை செய்ய வேண்டும் இதைத்தான் (Vote on Account) என்று கூறுவார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கம் செய்யும் செலவுக்குத்தான் அதிகாரம் உள்ளதோ தவிர, வருவானம் ஈட்டும் வரிகள் விதிக்க அதிகாரம் இல்லை.  மேலும் ஜனாதிபதி இத்தகைய சூழ்நிலைகளில் அவரது அதிகாரத்தை செலுத்த சட்டத்தில் இடமிருக்கிறது.  

இதன் விளைவுகள் என்ன?

பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நெருக்கடி தீரும் வரை  வெளிநாட்டு மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிறர் தங்கள் அமெரிக்கப் பயணத்தை ஒத்தி வைக்க வேண்டியதுதான். 
நயாகரா வீழ்ச்சி, தேசிய பொது இடங்கள், சுதந்திர தேவி சிலை, பொழுதுப்போக்கு பூங்காக்கள் ஆகியவை மூடப்படுள்ளன. சுமார் 7 லட்சத்து 83 ஆயிரம் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அரசியல் சண்டையால் அமெரிக்க மக்களில் சிலருக்கும், வர்த்தக நிறுவன்ங்கள் சிலவற்றுக்கும் விரைவாகவே பாதிப்பு இருக்கும். அமெரிக்காவிலேயே, சுற்றுச்சூழல் பராமரிப்பு நகரங்களில் குப்பை கூழங்கள் அகற்றுவது போன்ற பொதுச் சுகாதாரப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.


இந்த நிலை நீண்ட நாள் நீடிக்குமானால் அமெரிக்கா அரசு வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் உலக நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் Rating குறைந்து டாலரின் மதிப்பு அதிக அளவு குறையும். உலகிலேயே அதிகம் கடன் வாங்கிருக்கும் நாடான அமெரிக்கா, சீனாவிடம் தான் அதிக கடன் வாங்கியுள்ளது. மேலும் கடன் கொடுக்க எந்த நாடும் முன்வராது. கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் வேலையில்லா பிரச்சனை இந்த் ஆண்டில் தான் சற்றே தளர்ந்தது. ஆனால் அதற்க்குள் அரசாங்கமே சம்பளம் இல்லாமல் அரசு வேலையில் உள்ளோர்களுக்கு சம்பளம் தராமல் கட்டாய விடுப்பில் செல்லுமாறு கூறுவது வள்ர்ச்சியை பலவீனப்படுத்தும். உள்நாட்டு பொருளாதார பிரச்னைகளை ஏற்படுத்தும். 

ஏற்கனவே இருக்கும் பொருளாதார மந்த நிலையையும் பின்விளைவுகளையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் நடப்பு சிக்கலிலிருந்து வெளியே வந்து ஒரு ஒப்பந்தத்திற்கு கூடிய விரைவில் வருவார்கள் என்று எதிர்ப்பார்போம். 

Monday 23 September 2013

Is auditing mandatory for SMEs? - article in Nanayam Vikatan by CA G Karthikeyan FCA

சிறுதொழில் நிறுவனங்கள் : கட்டாய ஆடிட்டிங் அவசியமா?

திருப்பூரில் அட்டைப் பெட்டி தயாரிப்பு தொழிலில் கடந்த பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறார் சஞ்சய். கடந்த நிதி ஆண்டில் மட்டும் அவர் மொத்தமாக விற்பனை செய்த தொகை சுமார் ரூ.95 லட்சம். இவர் தனது கணக்குவழக்குகளைக் கட்டாயம் ஆடிட்டிங் செய்து அறிக்கை சமர்ப்பித்தாக  வேண்டுமா, அப்படி செய்யவில்லை என்றால் ஏதாவது அபராதம் விதிப்பார்களா, எவ்வளவுக்கு வரி கட்டுவது என்கிற பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவிக்கிறார். இவர் மட்டுமல்ல, தமிழகம் முழுக்க உள்ள சிறுதொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறவர்களுக்கு இந்தக் கேள்விகள் இருக்கவே செய்கின்றன.  
இதற்கான வருமான வரிச் சட்டங் களைத் தெரிந்துகொண்டால் இந்தக் கேள்விகளுக்கு தெளிவான விடை கிடைக்கும். வருமான வரிச் சட்டம் என்ன சொல்கிறது?
வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் தங்களது விற்பனை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமானால் தங்களது கணக்கு களை கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்தி ஆடிட்டரிடம் சான்றிதழ் பெற்று வரித் தாக்கல் செய்வது அவசியம். கடந்த பல வருடங்களாக இந்தத் தொகை ரூ.40 லட்சமாக இருந்தது. நிதி ஆண்டு 2011-12-ல் ரூ.60 லட்சமாகவும் நிதி ஆண்டு 2012-13-ல் ரூ.1 கோடியாகவும் உயர்த்தப் பட்டுள்ளது.
இதுவே மருத்துவர், இன்ஜினீயர் போன்ற சுயசேவை தொழில்புரிவோருக்கான (Professional) ஆண்டு மொத்த வருமானம் ரூ.10 லட்சமாக இருந்த வருமான வரம்பு, நிதி ஆண்டு 2011-12-ல் ரூ.15 லட்சமாகவும் 2012-13-ல் ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.   தற்போதைய வருமான வரிச் சட்டப்படி சஞ்சய் தனது கணக்குகளைக் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டியதில்லை. மேலும், சிறுதொழில்புரிவோர்களுக்கு வரித் தாக்கலை சுலபமாக்கும்படி சட்டத் திருத்தம் 44AD-படி ரூ.1 கோடிக்கு குறைவாக விற்பனை இருந்தால் மொத்த விற்பனையில் 8% உத்தேச வருமானமாக (Presumptive) கருதப்பட்டு அதற்குரிய வரியைச் செலுத்த வேண்டும். உதாரணமாக, சஞ்சய் தனது மொத்த விற்பனையான ரூ.95 லட்சத்தில் 8% கணக்கிட்டு, ரூ.7.6 லட்சத்திற்கு வரிக் கட்டினால் எந்தவித புத்தகங்களையும் பராமரிக்க வேண்டியதில்லை. இந்த உத்தேச வரிச் சட்டத்தை உபயோகப்படுத்துவதன் மூலம் கணக்கு பராமரிப்பு மற்றும் கட்டாயத் தணிக்கை போன்ற சில நடைமுறை சிரமங் களிலிருந்து தப்பிக்கலாம்.
உத்தேச வரிச் சட்டத்தில் சிறுதொழில் செய்கிறவர்களுக்கு பலவிதமான அனுகூலங்கள் கிடைக்கும். என்னென்ன அனுகூலங்கள் தெரியுமா?
வரி விதிப்புக்குரியவர் விருப்பப்பட்டால் அதிக வருமானம் காண்பித்து அதற்கான வரியைக் கட்டலாம்.
வருமான வரிச் சட்ட பிரிவுக்காக கணக்குப் புத்தகங்கள் எதும் பராமரிக்க வேண்டியதில்லை.
 உத்தேச வரிச் சட்டப்படி அனைத்து செலவுகளும் (தேய்மானம் உட்பட) கழித்துக்கொண்டதாக கருதப்பட்டு 8% லாபமாகக் கருதப்படும்.
கூட்டு நிறுவனத்தில் (Partnership Firm) பங்குதாரர்கள் சம்பளம் மற்றும் முதலீட்டிற்கான வட்டியைக் கழித்து மீதமுள்ள தொகைக்கு வரி கட்டினால் போதுமானது.
உத்தேசமான வரி விதிப்புக்குரியவர் முன் கூட்டிய வரி (Advance Tax) செலுத்த வேண்டியதில்லை.
உத்தேசமான வரி விதிப்புக்குரியவர் வங்கியில் செலுத்தப்படும் இந்த வியாபாரம் குறித்த ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் விவரம் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை.
இந்த உத்தேச வரிச் சட்டம், யாருக்கெல்லாம் பொருந்தாது என்பது முக்கியமான விஷயம். முதலில், பொருந்துபவர்களுக்கான பட்டியலைச் சொல்கிறேன்.
இந்தியக் குடிமகனான, தனிநபர் (Individual) வணிகம்.
கூட்டாண்மை நிறுவனம் (Partnership Firm) .
இந்து கூட்டுக் குடும்பம் (HUF).
இனி யாருக்கெல்லாம் பொருந்தாது என்பதைச் சொல்கிறேன்.
முகவர்/தரகு (Commission/ Brokerage) மூலம் சம்பாதிக்கும் நபர்.
ஏஜென்சி, வியாபாரி, மருத்துவர், இன்ஜினீயர் போன்ற சுயசேவை தொழில்புரிவோர்
(Professional).
சரக்கு வண்டியை வாடகைக்கு மற்றும் குத்தகைக்கு விடும் வியாபாரி.
உத்தேச வரிச் சட்டத்தில் சாதகமான பல அம்சங்கள் இருந்தாலும் பாதக அம்சங்கள் சில இருக்கவே செய்கின்றன. அதைப் பற்றி இனி பார்ப்போம்.
சில நிறுவனங்களின் மொத்த லாபமே 8 சதவிகிதத்திற்கு குறைவாக இருக்கும். நிகர லாபம் அதைவிட குறைவாக இருக்கும். உதாரணமாக, ரூ.50 லட்சம் விற்பனை செய்துவரும் ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் 3% என்று வைத்துக்கொள்வோம். உத்தேச வரிச் சட்டத்தை இந்த நிறுவனம் பயன்படுத்தினால் இதன் லாபமாக ரூ.4 லட்சத்தை உத்தேசித்து அதற்கு வரி கட்ட வேண்டும். ஆனால், லாபமோ ரூ.1.50 லட்சம் இருக்கும் சூழ்நிலை யில் இல்லாத வருமானத்திற்கு வரி கட்டுவது போல இருக்கும். இந்தச் சூழ்நிலையில் இத்தகைய நிறுவனங்கள் கணக்குப் புத்தகங் களை பராமரித்து அவற்றைக் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும், ஆடிட்டர் சான்றிதழுடன் வருமான வரித் தாக்கல் செய்யவேண்டும். இந்தச் சட்டம் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்திற்கும் (ரூ.1 கோடிக்கும் குறைவாக விற்பனைப் புரிவோர்) பொருந்தும் என்பது வருத்தமான உண்மை. அதாவது, லாபமே இல்லை என்றாலும் கணக்குப் புத்தகங்களைப் பராமரித்து, அவற்றைக் கட்டாயத் தணிக்கைக்கு உட்படுத்தி, ஆடிட்டரிடம் சான்றிதழ் வாங்கி வரிக் கணக்கு தாக்கல் செய்யவேண்டும்.
அரசின் வருமானத்தை அதிகரிக்கிற அதேநேரத்தில் தொழில் செய்பவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதால்தான் மத்திய அரசாங்கம் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்திருக்கிறது. சிறு தொழில் செய்கிறவர்கள் இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு, பயன் பெறுவது அவசியம்!

Tuesday 10 September 2013

ஒருநபர் கம்பெனி: சிறு தொழிலுக்கு வரப்பிரசாதம் !

இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால்தான் கம்பெனியாக பதிவு செய்ய முடியும் என்கிற நிலை மாறி, ஒரே ஒருவர் நடத்தும் நிறுவனத்தைகூட இனி கம்பெனியாக பதிவு செய்யலாம் என்கிற நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய கம்பெனிகள் சட்டம். இந்த மாற்றத்தைத் தொழில்முனைவோர்கள் பலமாக வரவேற்றுள்ளனர். இந்தப் புதிய சட்ட விதிமுறையால் தொழில் முனைவோர்களுக்கு என்ன லாபம் என கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

''உலக அளவில் பல நாடுகளில் ஒருநபர் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போதுதான் இதற்கு வழி பிறந்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதலீட்டில் தொடங்கும் தொழில்களைகூட கம்பெனிகளாக இனி பதிவு செய்துகொள்ள முடியும். இது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இதை சிறு தொழிலுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக எடுத்துக்கொள்ளலாம்'' என்றவர், இந்த சட்டத்தின் சாதகமான விஷயங்களையும் குறிப்பிட்டார்.  

கம்பெனி தகுதி!
கம்பெனிகள் பதிவாளரிடத்தில் பதிவு செய்வதன் மூலம் கம்பெனி என்கிற அடையாளம் கிடைக்கிறது. உரிமையாளர் என்கிற அடையாளம் தருகிற நன்மதிப்பைவிட கம்பெனி இயக்குநர் என்கிற நன்மதிப்பு கிடைக்கிறது. இதுதவிர, கம்பெனி என்கிற அடையாளம் கடன் வாங்கும் மதிப்பையும், சமூக அங்கீகாரத்தையும் தரும்.

பொறுப்புகள் வரையறை!
தனிநபரை உரிமையாளராகக்கொண்டு இயங்கும்போது பொறுப்புகளுக்கு வரையறை கிடையாது. தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது எனில், அதாவது தொழிலுக்கு என்று வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாதபோது அந்தப் பொறுப்புகளுக்கு ஈடாக உங்களது சொந்த சொத்துக்களையும் இழக்கவேண்டியிருக்கும். இதுவே கம்பெனியாக பதிவு செய்து கொள்ளும்போது தொழிலில் ஏற்படும் எதிர்பாராத நஷ்டங்களுக்கு சொந்த சொத்துக்களை இழக்க வேண்டிய தில்லை.

தணிக்கை!
நிதி ஆண்டு முடிந்து ஆறு மாதத்திற்குள் தொழிலில் வரவு செலவு / லாப, நஷ்ட விவரங்கள் ஒரு தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்யப்படவேண்டும். இந்த தணிக்கை அறிக்கையை கம்பெனிகள் பதிவாளரிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இப்படி வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதன் மூலம் கம்பெனியின் செயல்பாடுகள் மீது நம்பகத்தன்மை அதிகரிக்கும். தனிநபரை உரிமையாளராகக்கொண்டு செயல்படும் கம்பெனிக்கு இது கட்டாயமில்லை.

கூட்டங்கள்!
தனி உரிமையாளர்கள் நிறுவனம் என்றால் எந்தக் கூட்டத்தையும் நடத்தத் தேவையில்லை. அவரது போக்கிற்கு தொழிலை நடத்தலாம். ஆனால், கம்பெனியாக பதிவு செய்கிறபோது மூன்று மாதத்திற்கு ஒரு முறை இயக்குநர் கூட்டம் நடத்தி, கூட்ட அறிக்கையை பதிவு செய்யவேண்டும். ஆனால், வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடத்த தேவையில்லை. முதன்மை இயக்குநரின் விருப்பப்படி அதிகபட்சம் 15 இயக்குநர்களை நியமித்துக்கொள்ளலாம்.

நாமினிகள்!
உரிமையாளர் நிறுவனமாக இருந்தால் நாமினிகள் அவசியமில்லை. உரிமையாளருக்கு பிறகு அவரது வாரிசோ அல்லது உரிமையாளர் விரும்பும் நபரோ அப்படியே ஏற்று தொழிலை நடத்த முடியும். ஆனால், கம்பெனியாக பதிவு செய்துகொள்ளும்போது நாமினி நியமிக்க வேண்டியது கட்டாயம். இயக்குநருக்கு பிறகு அவரால் நியமிக்கப்பட்ட நாமினி மட்டுமே தொழிலை மேற்கொண்டு நடத்த முடியும்.

இதுதவிர, கம்பெனியை மேற்கொண்டு விரிவுபடுத்த வேண்டும் என்கிறபோது பொது நிறுவனமாக மாற்றிக்கொள்ள முடியும். இதன்மூலம் பொதுமக்களிடமிருந்து பங்கு மூலதனத்தையும் திரட்டிக் கொள்வதற்கான சாத்தியங்கள் உருவாகும்.

இதில் ஒருசில பாதகமான அம்சங் களும் இருக்கவே செய்கிறது. உதாரணமாக, கம்பெனியாகச் செயல்படும்போது அதிலிருந்து கிடைக்கும் ஆதாயத்திற்கு 30 சதவிகிதம் வரி கட்டவேண்டும். கம்பெனி எவ்வளவு அதிகமாக வருமானம் ஈட்டினாலும் 30 சதவிகிதம் வரி செலுத்தவேண்டும். இதுவே, உரிமையாளர் நிறுவனமாக இருந்தால் தனிநபர் உச்ச வரம்பு அடிப்படையில் வருமான வரிச் செலுத்தினால் போதும்.

உரிமையாளராக இருந்து செயல்படுவதைக் காட்டிலும் இயக்குநராக இருந்து செயல்படுவது ஒருவகையில் பாதுகாப்பும், தொழிலை மேலும் வளர்க்கவும் கிடைத்த வாய்ப்பாகவும் இந்த சட்டத் திருத்தம் பயன்படலாம். தொழில் முனைவோர்களுக்கு நல்ல வாய்ப்பாக இந்த சட்டம் பயன்படட்டும்.

Thursday 22 August 2013

பார்ட்னர்ஷிப் பிசினஸ்... பக்கா கைடுலைன்!

மகாதேவன்... பல வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வேலை தேடி வந்து செட்டில் ஆனவர். சொந்தமாக சில தொழில்களைச் செய்து நஷ்டங்களைச் சந்தித்தவர், பிறகு தனது நண்பர் ஒருவருடன் பங்குதாரராகச் சேர்ந்துகொண்டு மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை ஆரம்பித்தார்.
அந்த பிசினஸ் நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால், சில வருடங்களுக்கு முன் அவரது பார்ட்னருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இருவரும் பிரிய நேர்ந்தது. இதனால் இருவருக்குமே கடும் நஷ்டம் ஏற்பட்டது. மகாதேவன் தற்போது தனியாக தொழில் செய்து வந்தாலும் முன்புபோல வருமானமில்லை. இன்னொரு 'நல்ல’ பார்ட்னரை அவர் தேடி வருகிறார். கூட்டாக தொழில் செய்யும் பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருக்கவே செய்கிறது.  
''தனியாக தொழில் செய்து வெற்றி பெறுவதைவிடவும் கூட்டாகச் சேர்ந்து தொழில் செய்யும்போது தொழிலில் வெற்றி என்பதும் எளிதாகிறது. ஆனால், இந்த வெற்றியைத் தொடர்ந்து தக்கவைப்பதிலும், ஆரம்பத்தில் இருக்கும் பரஸ்பர புரிதல் நாளடைவில் குறைவதாலும் பார்ட்னர்கள் பிரியவேண்டிய நிலை உள்ளது. என்னதான் ஒப்பந்தம்போட்டு செயல்பட்டாலும், பார்ட்னர்களுக்குள் ஏற்படும் ஈகோ மோதல்களினால்  தொடர்ந்து செயல்பட முடியவில்லை'' என்கிறார் ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்.

''இரு நபர்கள் முதல் இருபது நபர்கள் வரை சேர்ந்து இந்த வகையிலான பார்ட்னர்ஷிப் நிறுவனங்களைத் தொடங்க முடியும். பங்குதாரர்கள் சட்டம் 1932 இதை அனுமதிக்கிறது. சின்ன அளவில் பிசினஸ் செய்வதற்கு மட்டுமல்ல, பெரிய நிறுவனமாகத் தொடங்குவதைக்கூட சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், ஆரம்பத்தில் வராத முரண்பாடுகள் வளர வளரத்தான் அதிக அளவில் ஏற்படுகிறது. இதைக் களையவேண்டும் என்றால் சின்னச் சின்ன ஏற்றத்தாழ்வுகளை உடனே சரிசெய்யவேண்டும். திட்டமிட்டபடி அடிக்கடி பேசுவது, முறையான பதிவேடுகள், மினிட்கள் போன்றவற்றை பராமரிக்கவும்வேண்டும். தொழிலில் குடும்ப உறுப்பினர்களை ஈடுபடுத்தும்போது அதுகுறித்து தெளிவாக முடிவெடுப்பதும், தங்களுக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களைத் தொழிலுக்குக் கொண்டுவரும்போது புதிதாக ஒப்பந்தங்களைப் போட்டுக்கொள்ளவும்வேண்டும். இதுதவிர, ஒப்பந்தப்படி வருமானத்தைப் பிரித்துக்கொள்வதும், முறைப்படி அனுமதி பெறாமல் புதிய தொழில் முயற்சிகளைத் தொடங்காமல் இருப்பதும் அடிப்படையான விஷயங்கள்'' என்றும் சொன்னார் அவர்.  
''பொதுவாக, தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது, மருத்துவம், சட்டம் மற்றும் தணிக்கை துறையில்தான் இதுபோன்று கூட்டாக இணைந்து தொழில் செய்வது அதிக அளவில் உள்ளது. ஆனால், இத்தொழில்கள் தனிநபர்களின் திறமை சார்ந்தவை. ஒருவரது தனித்திறமைக்காக மட்டுமே வாடிக்கையாளர் தேடிவருகிற நிலை வருகிறபோது கூட்டாளிகளுக்குள் ஈகோ பிரச்னை ஏற்பட வாய்ப்பு நிறையவே உள்ளது'' என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான முருகபாரதி.
கூட்டாகத் தொழில் செய்கிறபோது என்ன விஷயங்களை கவனிக்கவேண்டும்? கூட்டுத்தொழில் சிக்கலில்லாமல் இருக்க என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஆடிட்டர் கார்த்திகேயனும் வழக்கறிஞர் முருகபாரதியும் தரும் வழிகாட்டுதல்கள் இதோ:  
ஒப்பந்தங்கள்!
கூட்டு நிறுவனம் தொடங்கும் பட்சத்தில் முதல் வேலையாக ஒப்பந்தம் செய்துகொள்வது அவசியம். தொழிலில் ஈடுபடும் நபர்கள், அவர்களது விவரங்கள், முதலீடு விவரம், அவரவருக்கு உரிய பொறுப்புகள், லாபங்களைப் பிரித்துக் கொள்வதில் உள்ள விகிதங்கள் போன்ற வற்றை தெளிவாக வரையறுத்துக் கொள்ளவேண்டும். இந்த ஒப்பந்தத்தை முறையாக நிறுவனப் பதிவாளரிடம் பதிவு செய்துகொள்ளவேண்டியது அவசியம். ஒப்பந்தங்களைக் கூட்டாளிகள் மீறும்பட்சத்தில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் அதில் விவரமாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.
பொறுப்புகள்!
சில தொழில்களைப் பொறுத்தவரை, அவரவர் திறமைக்கு ஏற்ப அல்லது முதலீடு அளவிற்கேற்ப வேலைகளை பிரித்துக்கொள்ளவேண்டும். அவரவரின் பொறுப்புக்கேற்ப கவனம் செலுத்தி நிறுவனத்தை வளர்க்க வேண்டும். அடுத்தவர்களின் பொறுப்புகளில், வேலைகளில் தேவையில்லாமல் இன்னொருவர் தலையிடக் கூடாது.  
லாப விகிதங்கள்!
ஒப்பந்தத்தில் எழுதியுள்ளபடி, லாப விகிதங்களைப் பிரித்துக் கொள்ளவேண்டும். ஒப்பந்தத்தை மீறி ஒருவர் மட்டும் அதிக உரிமை கொண்டாடும்பட்சத்தில் அது ஏற்கெனவே செய்துகொண்ட ஓப்பந்தத்துக்கு எதிரானது. கூட்டாளிகளில் ஒருவர் அதிக லாபம் எதிர்பார்க்கிறார் எனில், அதை எந்த வகையில் அனுமதிப்பது என கூட்டாளிகள் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.  
குடும்ப உறுப்பினர்கள்!
சில தொழில்களில் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்கவேண்டும். அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு தரும் விதமாக தங்கள் பிள்ளைகளைத் தொழிலுக்கு கொண்டுவரும்போது ஏற்றத் தாழ்வுகள் ஏற்படக்கூடும். அதனால் யாருக்கு முக்கியத்துவம் தருவது என்கிற ஈகோ பிரச்னை ஏற்படலாம். இதைத் தவிர்க்க புதிதாக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.
கூட்டங்கள்!
கூட்டாளிகள் அனைவரும் அடிக்கடி சந்திக்கும்விதமாக கூட்டங்களை ஏற்பாடு செய்யவேண்டும். பொதுவாக, வருடத்திற்கு நான்கு முறையாவது இதுபோன்ற கூட்டங்களை நடத்தவேண்டும். தொழிலின் அவ்வப்போதைய நிகழ்வுகள், முன்னேற்றங்கள் போன்றவற்றை அந்தக் கூட்டத்தில் அலசவேண்டும். மேலும், கூட்ட முடிவுகளை பதிவு செய்வது, செயல்படுத் துவதற்கான திட்டங்கள் போன்றவற்றையும் வகுத்துக்கொள்ளவேண்டும்.
ஏற்றத்தாழ்வு!
என்னால்தான் தொழில் வளர்கிறது, மற்றவர்கள் எதுவும் செய்வதில்லை என்கிற எண்ணத்தை விடவேண்டும். கூட்டாளிகள் நலனைவிட தொழில் சிறப்பாக நடக்கவேண்டும் என்பதே பார்ட்னர்களின் நோக்கமாக இருக்கவேண்டும். ஒருவருக்கு ஒருவர் உழைப்பை பகிர்ந்துகொள்வதுதான் இதன் அடிப்படை.
கணக்கு வழக்குகள்!
நிறுவனத்தின் அனைத்து கணக்குவழக்கு களையும் முறையாக பதிவு செய்து அதனை தணிக்கை செய்யவேண்டும். கணக்குவழக்குகள் பார்ட்னர்கள் தெரிந்துகொள்ளும்படி வெளிப் படையாக இருக்கவேண்டும். பணம் மற்றும் வங்கி விவகாரங்களை கையாள்வதில் நம்பிக்கை தன்மையுடன் இருக்கவேண்டும். நம்பிக்கை மோசடி செய்யும் விதமாக தனிபரிவர்த்தனைகள் வைத்துக்கொள்ள கூடாது.  
பிரிவு ஒப்பந்தம்!
கூட்டாளிகள் பிரியவேண்டி வந்தால், முன்பு ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி, சொத்துக்களையும், பொறுப்புக்களையும் பிரித்துக் கொள்ளவேண்டும். கூட்டாளிகளுள் ஒருவர் மட்டும் பிரியவேண்டிய நிலை வந்தாலும், முறையாக பிற கூட்டாளிகளின் ஒப்புதலுடன் அவருக்கு உரிய சொத்துக்களையும், பொறுப்புக்களையும் பிரித்துத் தரவேண்டும். சட்டரீதியாக நீதிமன்றத்துக்குச் செல்வதைவிட, கூட்டாளிகள் அனைவருக்கும் பொதுவான நபர்கள் மூலம் பிரித்துக்கொள்வது நல்லது. கூட்டாளிகள் பிரிந்து செல்லும்போது அந்த தொழிலை தொடர்ந்து நடத்துவது குறித்து பிரிவு ஒப்பந்தத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பிரிந்து செல்பவரோ அல்லது அவரது உறவினர்களோ அந்தத் தொழிலை தனியாக மேற்கொள்வது குறித்தும் இந்த ஒப்பந்தத்தில் தெளிவாக எழுதப்படவேண்டும்.  
நற்பெயரை பிரித்துக்கொள்வது!
தொழிலில் புத்தக மதிப்பில் உள்ள சொத்துக் களை கூட்டாளிகள் விகிதாசார அடிப்படையில் பிரித்துக்கொள்ள முடியும். ஆனால், தொழிலில் சம்பாதித்துள்ள நற்பெயரை அனைவரும் பிரித்துக்கொள்ள முடியாது. தொழிலில் உள்ள நற்பெயரை மதிப்பிட்டு அதற்கான மதிப்பை பிரித்துக்கொள்ளவேண்டும். பிரிந்து செல்லும் கூட்டாளிக்கு அதற்கு ஈடான சொத்துக்களை தரவேண்டும். இந்த நற்பெயர் மதிப்பை கணக்கிட வழிமுறைகள் உள்ளன.
இதுபோன்ற அடிப்படை விஷயங்களில் தெளிவிருந்தால் கூட்டாளிகளுக்குள் சிக்கல் இருக்காது. ஆரம்பத்திலேயே இதில் தெளிவாக இருந்துவிட்டால் பிற்பாடு பிரச்னை ஏற்பட்டு பிரியவேண்டிய அவசியமே இருக்காது.
 

Due date for Service Tax Filing may be extended

Department has released the offline utility for filing of Service Tax Return (ST-3) on 31.07.2013 for the period 1st October, 2012 to 31st March, 2013. At the time of release of offline utility department has announced that online version of Service Tax return (ST 3) will be made available shortly. But even after 20 days of release of offline utility department is yet to release online Service Tax return (ST 3) utility. It is also to be noted that last date to file Service Tax return (ST 3) for the period 1st October, 2012 to 31st March, 2013 is 31st August 2013.


It seems a delay in release of Online Service Tax return (ST 3) for the period 1st October, 2012 to 31st March, 2013 will result in extension of due date for filing of Service Tax return (ST 3) for the period 1st October, 2012 to 31st March, 2013.

Friday 16 August 2013

FEMA Guidelines on Foreign Exchange Transactions

With the increased movement of goods, services and people across the globe, questions on foreign exchange are also increasing. In order to get a clarity, the following questions are reproduced based on RBI.
 
1. How much foreign exchange is available for a business trip?
Ans.  For business trips abroad to countries, other than to Nepal and Bhutan, a person can avail of foreign exchange up to USD 25,000 per visit.  Visits in connection with attending of an international conference, seminar, specialised training, study tour, apprentice training, etc., are treated as business visits. Release of foreign exchange exceeding USD 25,000 for business travel abroad (other than to Nepal and Bhutan), irrespective of the period of stay, requires prior permission from the Reserve Bank.
No release of foreign exchange is admissible for any kind of travel to Nepal and Bhutan or for any transaction with persons resident in Nepal.
Investments in Bhutan are permitted in Indian Rupees as well as in freely convertible currencies. If investment is made in freely convertible currency/ies, sale/winding up proceeds are required to be repatriated to India in freely convertible currencies.

2. How much foreign currency can be taken while buying foreign exchange for travel abroad?
Ans.  Travellers going to all countries other than (a) and (b) below are allowed to purchase foreign currency notes / coins only up to USD 3000. Balance amount can be carried in the form of travellers cheque or banker’s draft. Exceptions to this are (a) travellers proceeding to Iraq and Libya who can draw foreign exchange in the form of foreign currency notes and coins not exceeding USD 5000 or its equivalent; (b) travellers proceeding to the Islamic Republic of Iran, Russian Federation and other Republics of Commonwealth of Independent States who can draw entire foreign exchange in the form of foreign currency notes or coins.

3. How much foreign exchange can be drawn for medical treatment abroad?
Ans. AD Category I banks and AD Category II, may release foreign exchange up to USD 100,000 or its equivalent to resident Indians for medical treatment abroad on self declaration basis, without insisting on any estimate from a hospital/doctor in India/abroad. A person visiting abroad for medical treatment can obtain foreign exchange exceeding the above limit, provided the request is supported by an estimate from a hospital/doctor in India/abroad.
An amount up to USD 25,000 is allowed for maintenance expenses of a patient going abroad for medical treatment or check-up abroad, or to a person for accompanying as attendant to a patient going abroad for medical treatment/check-up.
The amount of USD 25,000 allowed to the patient going abroad is in addition to the limit of USD 100,000 mentioned above.

4. What are the facilities available to students for pursuing their studies abroad? Ans.  For studies abroad the estimate received from the institution abroad or USD 100,000, per academic year, whichever is higher, may be availed of from an AD Category I bank and AD Category II. Students going abroad for studies are treated as Non-Resident Indians (NRIs) and are eligible for all the facilities available to NRIs under FEMA, 1999. Educational and other loans availed of by students as residents in India can be allowed to continue. A student holding NRO account may withdraw and repatriate up to USD 1 million per financial year from his NRO account.  The student may avail of an amount of USD 10,000 or its equivalent for incidental expenses out of which USD 3000 or its equivalent may be carried in the form of foreign currency while going for study abroad.

5. How much foreign exchange is available to a person going abroad on employment?
Ans.  A person going abroad for employment can draw foreign exchange up to USD 100,000 from any Authorised Dealer in India on the basis of self-declaration.

6. How many days in advance one can buy foreign exchange for travel abroad?
Ans.  Permissible foreign exchange can be drawn 60 days in advance. In case it is not possible to use the foreign exchange within the period of 60 days, it should be immediately surrendered to an authorised person. However, residents are free to retain foreign exchange up to USD 2,000, in the form of foreign currency notes or TCs for future use or credit to their Resident Foreign Currency (Domestic) [RFC (Domestic)] Accounts. 

7. Can one pay by cash full rupee equivalent of foreign exchange being purchased for travel abroad?
Ans.  Foreign exchange for travel abroad can be purchased from an authorized person against rupee payment in cash only up to Rs.50,000/-. However, if the Rupee equivalent exceeds Rs.50,000/-, the entire payment should be made by way of a crossed cheque/ banker’s cheque/ pay order/ demand draft/ debit card / credit card / prepaid card only.

8. How much foreign exchange can a resident individual send as gift / donation to a person resident outside India?
Ans.  Any resident individual, if he so desires, may remit the entire limit of USD 200,000 in one financial year under LRS as gift to a person residing outside India or as donation to a charitable/educational/ religious/cultural organization outside India.  Remittances exceeding the limit of USD 200,000 will require prior permission from the Reserve Bank.
Form (CDF), on arrival in India.

9. Is it required to follow complete export procedure when a gift parcel is sent outside India?
Ans.  A person resident in India is free to send (export) any gift article of value not exceeding Rs.5,00,000 provided export of that item is not prohibited under the extant Foreign Trade Policy and the exporter submits a declaration that goods of gift are not more than Rs.5,00,000 in value.
Export of goods or services up to Rs.5,00,000 may be made without furnishing the declaration in Form GR/ SDF/ PP/ SOFTEX, as the case may be. 

10. What is the Liberalised Remittance Scheme of USD 200,000?
Ans.  Under the Liberalised Remittance Scheme, all resident individuals, including minors, are allowed to freely remit up to USD 200,000 per financial year (April – March) for any permissible current or capital account transaction or a combination of both.

11. Please provide an illustrative list of capital account transactions permitted under the scheme.
Ans..  Under the Scheme, resident individuals can acquire and hold immovable property or shares or debt instruments or any other assets outside India, without prior approval of the Reserve Bank. Individuals can also open, maintain and hold foreign currency accounts with banks outside India for carrying out transactions permitted under the Scheme. 

12. What are the prohibited items under the Scheme?
Ans.  The remittance facility under the Scheme is not available for the following:
i) Remittance for any purpose specifically prohibited under Schedule-I (like purchase of lottery tickets/sweep stakes, proscribed magazines, etc.) or any item restricted under Schedule II of Foreign Exchange Management (Current Account Transactions) Rules, 2000;
ii) Remittance from India for margins or margin calls to overseas exchanges / overseas counterparty;
iii) Remittances for purchase of FCCBs issued by Indian companies in the overseas secondary market;
iv)  Remittance for trading in foreign exchange abroad;
v) Remittance by a resident individual for setting up a company abroad;
vi) Remittances directly or indirectly to Bhutan, Nepal, Mauritius and Pakistan;
vii) Remittances directly or indirectly to countries identified by the Financial Action Task Force (FATF) as “non co-operative countries and territories”, from time to time; and
viii) Remittances directly or indirectly to those individuals and entities identified as posing significant risk of committing acts of terrorism as advised separately by the Reserve Bank to the banks.

13. Is it mandatory for resident individuals to have PAN number for sending outward remittances under the Scheme?
Ans.   It is mandatory to have PAN number to make remittances under the Scheme.

 For any queries on Forex facilities for residents, please email karthikeyan.auditor@gmail.com or call +91 98422 10422