Tuesday, 31 May 2016

என்ன எதிர்பார்க்கலாம் இந்த பட்ஜெட்டில்?

ஓர் இடைக்கால பட்ஜெட் மற்றும் ஒரு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்துள்ளது மத்திய அரசு. பொதுவாக ஆட்சிப் பொறுப்பில் இருகும் அரசாங்கம் தமது கடைசி இரு பட்ஜெட்களை ஜனரஞ்சகமாக தாக்கல் செய்யும். ஆகவே இந்த பட்ஜெட் சற்றே முக்கியத்துவம் பெறுவதாக அமைகிறது. மேலும் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி இல்லாமல் உள்ள தற்போதைய சூழ்நிலையில் இந்த பட்ஜெட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற் கான முயற்சியும் உத்வேகமும் கொடுக்கப்பட்டு வருகிறது. இருந் தாலும், இத்திட்டங்களுக்கான பலனை பொதுமக்கள் உடனடி யாகப் பெறாத உணர்வுடன் இருக்கின்றனர். என்ன எதிர்பார்க்க லாம் இந்த பட்ஜெட்டில்?

தனி நபர் வருமானம்

பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் தனி நபர் வருமான வரி வரம்பு ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்தப் படும் என பெரும்பான்மையான மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. உயர்ந்து வரும் பணவீக்கத்தில் தற்போதைய வரம்பான ரூபாய் 2.5 லட்சத்தை சற்று உயர்த்தி நடுத்தர மக்களுக்கு உதவலாம் என்று பெரும்பான்மை கருத்து நிலவுகிறது.

வீட்டுக் கடன்

சொந்த வீட்டில் வசிப்பவர் வீட்டுக்கடனுக்கான வட்டியாக ரூபாய் இரண்டு லட்சம் வரை மற்ற வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள முடியும். உயர்ந்து வரும் வீடு கட்டும் தொகையை கருத்தில் கொண்டு, சொந்தமாக வசிக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டியை ரூபாய் இரண்டு லட்சத்தில் இருந்து உயர்த்த வேண்டும். தற்போது வீடு அல்லது ப்ளாட் கட்டி முடிக்கப்படும் முன் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள முடியாது. இந்த பட்ஜெட்டில் இதற்கு மாற்றம் கொண்டு வர வேண்டும். அதாவது ப்ளாட்டை புக் செய்ததில் இருந்து வாங்கிய கடனுக்கான வட்டியை வருமானத்தில் இருந்து கழித்துக் கொள்ள வழி வகை செய்ய வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

வருமானவரிச் சட்டப் பிரிவு 54 மற்றும் 54F ன் படி நீண்டகால மூலதன லாபத்தை ஒரு புதிய வீட்டில் முதலீடு செய்யும் போது மூலதன லாபத்துக்கு வரி ஏதும் கட்டத் தேவையில்லை. இதுபோல நீண்டகால மூலதன லாபத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது மூலதன வரியில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யலாம். இது பங்குச்சந்தையை ஊக்குவிக்கும்.

சரக்கு மற்றும் சேவை வரி (GST)

நுகர்வோருக்கு முழுப்பலனை யும் அளிக்கக்கூடிய GST இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடை முறைக்கு வரும் என்று நிதி அமைச்சர் கடந்த பட்ஜெட் தாக்கலின் போது கூறினார். ஆனால் எதிர்கட்சிகளது ஆதரவு இல்லாததால் இது தாமதம் ஆகிறது. இந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படா விட்டாலும் குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட லாம். இந்த பட்ஜெட்டில் ஜிஎஸ்டி குறித்த ஒரு முதல் வரையறை கொடுக்கப்பட வேண்டும். இந்த மசோதா வருவதால் சேவை மற்றும் உற்பத்தி வரி விகிதத்தில் இந்த பட்ஜெட்டில் பெரிய மாற்றம் இருக்காது.

கார்ப்பரேட் வரி

நிறுவனங்களுக்கான கார்ப்ப ரேட் வரி 30% லிருந்து படிப்படியாகக் குறைத்து சில ஆண்டுகளில் 25% ஆக குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் கூறியிருந்தார். ஆகவே இந்த பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கலாம். MAT (Minimum Alternate Tax), அதாவது குறைந்தபட்ச மாற்று வரி, சுமாராக 20% ஆக இருந்து வருகிறது. கார்ப்பரேட் வரி 25% வரை குறைக்கப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில் இந்த குறைந்தபட்ச மாற்று வரி தற்போதைய 20% லிருந்து குறைக்கப்பட வேண்டும். இந்திய ஏற்றுமதி கடந்த ஆண்டுகளில் குறைந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ரூபாயின் மதிப்பு உலகச் சந்தையில் குறைந்து வரும் நிலையில் ஏற்றுமதி அதிகரித்து இருக்க வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை தொழில் துறைக்கு அறிவிக்க வேண்டும்.

புதிய தொழில் நிறுவனங்களைத் துவங்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. வங்கி கடனுக்கான வட்டியைக் குறைக்கும் பட்சத்திலும் புதிய நிறுவனங்களைத் துவங்க சில சலுகைகளைக் கொடுக்கும் பட்சத்தில் தனியார் நிறுவனங்கள் புதிய தொழில் நிறுவனங்களைத் துவங்க ஆர்வம் காட்ட ஒரு வாய்ப்பாக அமையும்.

கருப்புப் பணம்
கடந்த பட்ஜெட்டில் வெளி நாட்டில் கருப்புப்பணம் வைத் திருப்பவர் மீது கடுமையான சட்டம் பாயும் என்று கூறிய நிதி யமைச்சர் அதற்கான சட்டத்தை யும் 2015ல் ஏற்படுத்தினார். ஆனால் 700க்கும் குறைவான மக்களே இந்தச் சட்டப்படி வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்துக்கான வரியையும் அபராதத்தையும் செலுத்தினர். உள்நாட்டிலுள்ள கருப்புப் பணத்தை மீட்க இந்தப் பட்ஜெட்டில் சில வருமானவரி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

மாற்றம் வேண்டும்

வருமான வரிச் சட்டத்தில் பல விதிமுறைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமாக்கப்பட்டு தற்போதைய பணவீக்கத்தை கணக்கில் கொள்ளப்பட்டாமல் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. உதாரணமாக குழந்தைகளுக்கான படிப்புச் செலவுகளுக்கான அலவன்ஸ் மாதம் 100 ரூபாயாகவும், ஹாஸ்டலுக்கான அலவன்ஸ் மாதம் 300 ரூபாயும் ஒரு குழந்தைக்கு நிர்ணயம் செய்து அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த விதிமுறை பல ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தையின் படிப்புச் செலவுக்கு ஆண்டுக்கு சுமார் 40,000 முதல் 4 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது.

மேலும் பயணச் செலவுகளுக்கான அலவன்ஸ் மாதம் 1,600 ரூபாயாக இருந்து வருகிறது. சம்பளம் பெரும் வரிதாரர்கள் மாதத்துக்கு 1,600 என்பது குறைவான தொகை இதை அதிகரிக்க வேண்டும். சம்பளம் பெறுபவர்களுக்கு முதலில் இருந்த படி Standard Deduction தொகையை அதிகப்படுத்த வேண்டும். அல்லது வரி விலக்கு வருமானத்தில் இருந்து கொடுக்க வேண்டும்.

மேலும் தற்போது விருப்ப ஒய்வு பெறும் சம்பளதாரர்கள் பெறும் மொத்த தொகையில் ரூபாய் 5 லட்சம் விலக்கு கொடுக்கப்படுகிறது. இதுபோல வீட்டு வாடகை அலவன்ஸ்(HRA) பெறாதவர்களுக்கான வீட்டு வாடகைக்கான கழிவாக Rs.20,000/- அனுமதிக்கப்படுகிறது. தற்போதைய பணவீக்க நிலையில் இவை மிகவும் குறைவான தொகை. இவற்றைச் சரி செய்யும் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப் பட வேண்டும். இதனை இந்த பட்ஜெட்டில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

ஆடிட்டர். ஜி.கார்த்திகேயன் - karthikeyan.auditor@gmail.com

No comments:

Post a Comment