Sunday, 4 October 2015

Can an Indian National invest in property abroad?

கடந்த வாரத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியரான நரசிம்மன்இந்தியாவில் பண்ணை வீடு வாங்க முடியுமா என்ற கேள்விக்கான பதிலை ஆராய்ந்தோம்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் விவசாய பூமியில் முதலீடு செய்ய ரிசர்வ் வங்கியில் அனுமதி அளிப்பதில்லைஇந்த வாரம் நவின் என்கிற வாசகர் கீழ்கண்ட கேள்வியைக் கேட்டுள்ளார்.
நான் தொழில் நிமிர்த்தமாக சிங்கப்பூரில் இடம் வாங்க முடியுமாஉங்களின் முந்தைய கட்டுரையில் வெளிநாட்டு வாழ் இந்தியர் பண்னை இடம் வாங்க முடியுமா என்பது குறித்து இருந்ததுஉங்களது ஆலோசனை எனக்கு தேவை?”
உங்களது கேள்விக்கான பதிலை இரு விதமாகப் பார்க்க வேண்டும்முதலாவதாக இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு அசையாச் சொத்தில் முதலீடு செய்ய பணம் அனுப்புவது குறித்து இந்தியச்சட்டம் என்ன சொல்லுகிறது என்று பார்க்க வேண்டும்.
இரண்டாவதாக எந்த நாட்டில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களோ அங்கு வெளிநாட்டு வாழ் மக்களுக்கான அனுமதி என்ன என்பது குறித்து பார்க்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி இந்தியக் குடிமகன் வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவதன் நோக்கத்தை பல வகைகளாக பிரித்திருக்கிறதுபடிப்பு செலவுமருத்துவச் செலவுஅந்நிய நாட்டு நிறுவனங்களில் முதலீடு,அந்நியச் சுற்றுலா போன்ற பல்வேறு வகைகளாகப் பிரித்து ஒவ்வொரு வகைக்கும் ஒரு வரம்பையும் தொகையும் நிர்ணயம் செய்துள்ளனர்.
சில செலவுகளுக்கும் முதலீட்டிற்கும் ரிசர்வ் வங்கி முன் அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட தொகை வரை அனுப்பலாம்இதனை LRS (Liberalised Remittance Scheme) அதாவது “தாராளமயமாக்கப்பட்ட பணம் செலுத்துதல் முறை” என்று கூறப்படுகிறது .
இந்த பிரிவின் படி இந்திய வாழ் குடிமகன் (மைனர் உட்பட)ஆண்டிற்கு $2,50,000 வரை முன் அனுமதி இல்லாமல் வெளிநாட்டிற்கு அனுப்பலாம்இது ஒவ்வொரு ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ள நிதியாண்டிற்கும் பொருந்தும்பணம் செலுத்துபவர் மைனராக இருக்கும்பட்சத்தில்,அவருடைய காப்பாளர் கையொப்பம் இட வேண்டும்.
முதலில் இந்த வரம்பு $1,25,000 ஆக இருந்ததுடாலர் மதிப்பு கடகட என்று ஏறத் துவங்கியப்பின் ரிசர்வ் வங்கி $75,000 ஆகக் குறைத்ததுஆனால் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு கடந்த ஆண்டு முன்னேற்றமடைந்தவுடன்இந்த வரம்பு$2,50,000க்கு உயர்த்தப்பட்டது.
இது தவிர கீழ்காணும் நோக்கங்களுக்கும் முன் அனுமதியில்லாமல் $2,50,000 வரை வெளிநாட்டிற்கு அனுப்பலாம்.
  • வெளிநாடுகளில் வியாபார நோக்கமாக கருத்தரங்கு அல்லது பயிற்சிகளில் பங்கு பெற
  • உறவினர்களது பராமரிப்புக்கான செலவு
  • வெகுமதி
  • மருத்துவ செலவு
  • படிப்பு செலவு
  • வெளிநாட்டில் குடிபெயர போன்ற செலவுகள்
இந்திய வாழ் குடிமக்கள் வெளிநாடுகளில் அசையா சொத்துகள் வாங்கவும் இந்த திட்டத்தில் அனுமதி உண்டுபட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடனீட்டு பத்திரங்களிலும் முன்அனுமதி இல்லாமல் இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்யலாம்.

இந்திய வாழ் குடிமக்கள் வியாபார முயற்சியில் வெளிநாட்டில் கூட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யவும்இந்திய கம்பெனியின் துணை நிறுவனங்களில் (subsidiary companies)முதலீடு செய்யவும் இந்த வரம்பு பொருந்தும்..

இத்திட்டத்தின்படி பணம் வெளிநாடு அனுப்ப Form A-2 என்ற இரண்டு பக்கப் படிவத்தை படிவத்தில் ரிசர்வ் வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும்நிரந்தர கணக்கு எண் (PANஇல்லாத ஒருவர் இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது.
இந்தத்திட்டத்தில் ஒரே ஆண்டில் பல முறை அனுப்பவும் வசதி உள்ளதுஆனால் $2,50,000மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் வீடு மற்றும் சொத்து வாங்கஅதிலும் குறிப்பாக சீனர் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளனசிங்கப்பூர் சட்டக் குறிப்புப் பற்றி அந்தநாட்டு ஆலோசகரிடம் குறிப்புப் பெற்று நீங்கள் சொத்து வாங்கலாம்.

Is a gift received from an NRI taxable?

ராமநாதபுரத்தில் “லெதர் ஹமீது என்றால் மிகவும் பிரபலம்.தன் தாத்தா காலத்து தோல் தொழிற்சாலையை பாதுகாத்து லாபகரமாக நடத்தி வரும் சாகுல் ஹமீது சில ஆண்டுகளுக்கு முன் தனது மகள் பர்வீனைக்குவைத் மாப்பிள்ளைக்கு விமர்சையாக ண முடித்து வைத்தார்எம்பிஏ படித்த கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதை வீணாக்க விரும்பாமல் தன் கணவரின் லாபகரமான ட்ரேடிங் நிறுவனத்தில் திருமணத்திற்கு பிறகுமுழு நேரப் பங்குதாரராக இருந்து நல்ல வருமானத்தை சம்பாதித்து வருகிறார் பர்வீன்.வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்தியாவுக்கு வந்து செல்லும் பர்வீன் அப்பாவிடம் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும்படி அடிக்கடி கூறி வந்தார்கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ரூகோடி வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என தோன்றியதுஎப்போதும் கடன் வாங்க விருப்பம் இல்லாத சாகுல் ஹமீது அதைப் பொருட்படுத்தவில்லை.

ஆனால் சமீபகாலமாக தன் லெதர் கம்பெனி சுமாரான லாபம் மட்டுமே ஈட்டி வருவதால் வேறு என்ன செய்வது என்று அசைபோட்டுக் கொண்டிருந்தார்மகள் கூறுவது போன்று அவளது வியாபாரத்தை அபிவிருத்தி செய்யலாம் என்ற ஆசை தனக்கும் இருப்பதை மனைவியிடம் கூறி வந்தார்.

வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் அளவுக்கு தன்னிடம் முதலீட்டு பணம் இருக்குமா என்று பல வகையில் யோசித்தார்வழக்கம் போல் வீட்டில் நடக்கும் அனைத்தையும் ஒப்பிக்கும் போக்கில் இதை மகளின் காதில் போட்டு வைத்தார் ஹமீதின் மனைவி சுலைஹா.

அப்பாவிடம் ரூகோடி மட்டுமே இருத்தது என்றதும் நான் மிச்ச தொகையை வெகுமதியாகக்((Gift) கொடுக்கிறேன்நீங்கள் அதை வைத்து வியாபாரத்தை சிறப்பாக நடத்துங்கள் என்று கூறினாள்வெகுமதி வாங்கலாமாஅதற்கு வரிகட்ட வேண்டுமாஅதற்கு வரையறை ஏதும் உள்ளதாபோன்ற சந்தேகங்களும் குழப்பங்களும் சாகுல் ஹமீதுக்கு ஏற்பட்டதுஇது குறித்தசட்ட பிரிவுகளை குறித்து விபரம் சேகரிக்க துவங்கினார்.

வெகுமதி என்றால் என்ன என்பதை முதலில் காண்போம்:

ஒரு தனி நபர்நடப்பாண்டில் உறவினர்கள் அல்லாத வேறு யாரேனும் ஒருவரிடமிருந்து ரூ.50,000-த்திற்கு மேல் ரொக்கமாகவோ அல்லது ரூ.50,000-த்திற்கு அதிகமான மதிப்புடைய ஏதேனும் அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை வெகுமதியாகப் பெற்றிருப்பாரயின் சட்டப்பிரிவு 56ன் படி அது வருமானமாகக் கருதப்படும்.

ஒருவேளை இம்மதிப்பு ரூ.50,000த்திற்குள் இருந்தால் அது வருமானமாகக் கருதப்படாதுஇது அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வங்கி மூலமாக வரும் தொகைகளுக்கும் பொருந்தும்.

உதாரணமாகசாகுல் ஹமீது அவருடைய நண்பரிடமிருந்து ரூ.30,000 மட்டும் வெகுமதியாக வாங்கினால் இது வருமானமாக எடுத்துக் கொள்ள முடியாதுஇதுவே அவர் ரூ.1,50,000வெகுமதியாக பெற்றிருக்கிறார் எனில்மீதமுள்ள ரூ.1,00,000 வருமானமாக கருதப்படும்.

திருணத்தின் போது கிடைக்கும் வெகுமதி ரூ.50,000 த்திற்கு மேல் இருந்தாலும் இது வரிக்குட்படுத்துவது இல்லைஎனினும்நிச்சயதார்த்த்திற்கு உறவினர்கள் அல்லாத வேறு யாரேனும் ஒருவரிடமிருந்து ரூ.50,000-த்திற்கு மேல் ரொக்கமாகவோ அல்லது ரூ.50,000-த்திற்கு அதிகமான மதிப்புடைய ஏதேனும் அசையும் அல்லது அசையாச் சொத்துக்களை வெகுமதியாகப் பெற்றிருப்பாராயின் அது வருமானமாக்க் கருதப்படும்.

உயில் மூலமாகவோ அல்லது வாரிசு சொத்தாகவோ பெறுவது போன்றவையும் ரூ.50,000 த்திற்கு மேல் இருந்தாலும் அதற்கு வரிக்கட்ட தேவையில்லை.

இந்த சட்டத்தில் முக்கியமாக பார்க்க வேண்டிய பிரிவுஉறவினர்களிடமிருந்து வாங்கும் வெகுமதிக்கு வரிக்கட்ட தேவையில்லை.
வருமான வரி சட்டத்தின் படி உங்கள் உறவினர்கள் என்று கருதப்படுவோர்
  • தம் கணவன் அல்லது மனைவி
  • சொந்த சகோதரர் அல்லது சகோதரி
  • மனைவியின் சொந்த சகோதரர் அல்லது சகோதரி
  • பெற்றோர்களின்சொந்த சகோதரர் அல்லது சகோதரி
  • தனிப்பட்ட அல்லது மனைவியின் நேரடியான முன்னோர்கள் அல்லது சந்ததியர்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உறவினர்களிடமிருந்து எவ்வளவு மதிப்புள்ள ரொக்கமோபொருளோ பெற்றாலும் அது வருமானமாகக் கருதப்படாதுமகளிடம் வெகுமதி பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று அறிந்ததும் தன் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய ஆயத்தமானார்எதற்கும் மாப்பிள்ளையிடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுங்கள் என்று மனைவி கூறியதற்கு மறுப்பு தெரிவிக்காமல்அவரிடம் பேசினார்உங்களுகில்லாமலாதாராளமாக தரலாம் என்று மாப்பிள்ளை தலை அசைக்கவேமுழு உற்சாகத்தோடு வேலையில் இறங்கினார் “லெதர் ஹமீது.

What can you bring back from a trip abroad?

கேரளாவிலிருந்த ருக்மணிக்கு ஆரம்பம் முதலே வெளிநாடு சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. பல காரணங்களால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது. தன்னால் முடியாததை தன் குழந்தையாவது அனுபவித்து விட வேண்டும் என்று எண்ணி, அவரது மகள் சிநிக்தாவை ஆஸ்திரேலியா அனுப்பி படிக்க வைத்தார். மெல்போர்ன் நகரில் ஆர்வத்துடன் படித்த சிநிக்தா, முன்னணி மாணவியாக திகழ்ந்தார். படித்து முடித்ததும் ஒரு நல்ல கம்பெனியில் அதிகாரியாக வேலையும் கிடைத்தது.
ருக்மணிக்கு பெருமையும் மகிழ்ச்சியும் பெருக்கெடுக்க ஆனந்த வெள்ளத்தில் திளைத்தார். என்னதான் ஸ்கைப்பில் (skype) தினமும் பேசி வந்தாலும் ருக்மணிக்கு மகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதோடு மட்டும் இல்லாமல், மெல்போர்ன் செல்லும் ஆசையும் கழுத்துவரை வந்துவிட ஆஸ்திரேலியா செல்ல தயாரானார் ருக்மணி. மகளுக்கு தேவையான பருப்பு பொடி, தேங்காய் பொடி, ஊறுகாய் என தானே தயார் செய்து அழகாக எடுத்து வைத்தார்.

ஆறு மாத விசாவில் அவர் கணவர் கிருஷ்ணனுடன் ஆஸ்திரேலியா பறந்தார். விமானம் தரையிரங்கினாலும் கால்கள் மட்டும் தரையில் படாமல் வாயெல்லாம் பற்களுடன் மெல்போர்னில் இறங்கினார் ருக்மணி. பெண்ணைப் பார்த்ததும் கண்கள் கலங்க,“பூசணிக்காயைப் போல் அனுப்பி வைத்தேன், இப்படி ஒட்டடை குச்சிபோல இருக்கிறாயே! என்று புலம்பினார். இருந்த 6 மாதத்தில் மகளை முடிந்தவரை தேத்திவிட்டு மனமில்லாமல் வீடு திரும்ப ஆயத்தமானார்.  

தனக்கும், தன் சகோதரிகளுக்கும் துணிமணி நகை என்று வாங்கி ஜமாய்த்துவிட்டார். லட்சத்திற்கு மேல், திகைத்து போகும் வரை ஷாப்பிங் முடித்தபின் சிங்கப்பூர் வழியாக இந்தியா திரும்ப ஆயத்தமானார். ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருது என்று கிண்டலடித் தகணவருடன் சேர்ந்து தானும் சிரித்துக்கொண்டார்.

இந்தியா வந்தவருக்கு விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிக பெட்டிகள் கொண்டு வந்ததற்காக வரி செலுத்த வேண்டும் என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்தார். கஸ்டம்ஸ் அதிகாரியிடம் விசாரித்ததில் சரியான பாஸ்போர்டுடன், பொதுவாக இந்தியாவில் வசிக்கும் ஒரு இந்திய குடிமகன், மியான்மர், சீனா, பூட்டான், நேபாள் தவிர மற்ற நாடுகளில் இருந்து பின்வரும் அளவில் இந்தியாவிற்குள்  பேகேஜ் கொண்டு வர முடியும்
 
தனிப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் என்ன என்பது பற்றி பேகேஜ் சட்டத்தில் விவரமாக கூறப்படவில்லை. எனினும் பொதுவாக அத்தியாவசிய பொருட்களாகக் கருதப்படுபவை நகை அல்லாத, ஏற்கனவே உபயோகித்த உடை, சோப்பு, ஒப்பனைப் பொருட்கள், குடை, நடைக்கோல், தலையணை, போர்வை, செருப்பு, ஷூ போன்றவை. பல மின்னனு பொருட்களும், தளபாடங்களும் தனிப்பட்ட அத்தியாவசிய பொருட்ளாக கருதப்படாது.
வெளிநாட்டில் தொழில் செய்வதற்காக சென்று குறைந்தது 3 மாதங்கள் தங்கியிருப்பின், இந்தியா திரும்பும் போது வீட்டு உபயோகப் பொருட்கள் ரூ.12,000 மதிப்புள்ள வரையும், தொழில் சம்பந்தமான சாதனங்கள் ரூ.20,000 வரையும் எடுத்து வரலாம். குறைந்தது 6 மாதங்கள் தங்கியிருப்பின், இந்தியா திரும்பும் போது வீட்டு உபயோகப் பொருட்கள் ரூ.12,000 மதிப்புள்ள வரையும், தொழில் சம்பந்தமான சாதனங்கள் ரூ.40,000 வரையும் எடுத்து வரலாம். தொழில் சாதனங்களாக கேமராக்களும், கணினிகளும் வராது. அதாவது ஐ.டி துறையில் தொழில் செய்து வந்தாலும் கணினிகளை தொழில் சாதனங்களாக கருத இச்சட்டத்தில் இடமில்லை, அது தனிப்பட்ட அத்தியாவசிய பொருட்களுக்குள் அடங்கும்.
அனுமதிக்கப்பட்ட அளவுகளைத் தாண்டி எடுத்து வரும் பொருட்களுக்கு 36.05% கஸ்டம்ஸ் வரி செலுத்த வேண்டும்.
அடுத்ததாக, ரூ.5,000 வரை மட்டுமே இந்திய ரூபாயாக கொண்டு வர முடியும். அந்நியச் செலாவணிக்கு எந்த உச்ச வரம்பும் இல்லை. ஆனால், பணமாக $ 5,000 ற்கு மேலாகவோ, பணமாகவோ மற்ற வகையிலோ $ 10,000 வரை கொண்டு வரலாம்.
இதையெல்லாம் கேட்டு அறிந்து கொண்ட ருக்மணி, கணவரிடம் “அவர் கேட்பதை கொடுத்துவிடுங்கள். வீட்டில் அக்கா மோர் குழம்போடு  நாம் வாங்கி வந்த பொருட்களுக்காக காத்திருப்பாள் என்றார். “முக்கால் லட்சம் ரூபாய்!! உலகம் சுற்றுவது ஒரு நிமிடம் நின்றே விட்டது. எதையும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செய்யும்கிருஷ்ணன், தான் யோசிக்காமல் நிறைய வாங்கி வந்து இப்படி மாட்டிக்கொண்டோமே என்று தன்னையே கடிந்து கொண்டார்.
ஆனால் வாங்கிய பொருட்களில் பாதி அவர் குவித்ததுதான் என்பதால் மனைவியையும் கடிந்து கொள்ள முடியவில்லை. சரி வேறு வழி என்ன என்று வரியை செலுத்திவிட்டு பொருட்களை எடுத்துச் சென்றார்.
(இந்தக் கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின்,karthikeyan.auditor@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.)

Procedure to follow when purchasing property from an NRI

சென்னையை சேர்ந்த வெள்ளை வேட்டி வெங்கட்ராமன், வக்கீல் குமாஸ்தாவாக இருந்து கடினமாக உழைத்து படிப்படியாக முன்னேறியவர். தன் உடையை போலவே கையும் சுத்தம் என்பதால் பல ஆண்டுகள் கடின உழைப்பிற்குப் பிறகு ஒரு வழியாக 1986ம் ஆண்டில் தன் முதல் வீட்டை சென்னை தியாகராய நகரில் வாங்கினார். 

சிறிய வீடு தான் என்றாலும் எல்லா வசதிகளும் பக்கமாக இருந்ததால் மனைவியும் மகளும் எந்த குறையும் கூறாமல் ஆனந்தமாய் குடிபுகுந்தனர். வந்த சில வருடங்களிலேயே ஒரு ஆன்மீக புத்தகக் கடை தொடங்கி அமோகமாக லாபம் சம்பாதித்தார். பெண்ணுக்கு கல்யாணத்தையும் திருப்திகரமாக முடித்து வைத்தார். மாப்பிள்ளை ஸ்ரீராமன் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். வருடங்கள் கடந்தன, இரண்டு பேரன்கள், அழகாக வாழ்க்கை நகர்ந்தது. 

ஒரு நாள் “போதும் பா! வயசான காலத்தில் கடையில் போய் உக்காராட்டா என்ன, சாம்பு அங்கிள் பாத்துப்பார். எங்கள் வீட்டிற்கு அடுத்த வீடே விற்கப் போகிறார்கள், பேசாமல் வாங்கி இங்கயே வந்து ரெஸ்ட் எடுத்துக்கோயேன்” என்றாள் மகள். மகளோடு மருமகனும் மனைவியும் சேர்ந்துகொண்டனர். முடியாது என்று ஒற்றை காலில் நின்றவர் ப்ளீஸ் தாத்தா என்று பேரன் கேட்டதும் மறு கணமே சரி என்றுவிட்டார்.


வீடு வாங்கும் படலம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. பக்கத்து வீடு யூ எஸ் ஏ (USA)வில் இருக்கும் நாராயணனுடையது. போனில் நன்றாக பேசினார், வீடும் நன்கு விஸ்தாரமாக அழகாக இருந்தது. வெங்கட்ராமனின் மனைவிக்கு வீடு மிகவும் பிடித்துப் போனது. பெண் வீட்டின் பக்கமாக இருப்பதால் சிறிய குறைகளை பெரிது படுத்தாமல் வீட்டை வாங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். 

அப்போது ரியல் எஸ்டேட் மாப்பிள்ளை வெளிநாட்டு வாழ் இந்தியரின் சொத்தை வாங்குவதால், சில கூடுதல் விதிமுறைகள் இருப்பதாகக் கூறினார். “ஏதேனும் அதிக செலவு ஆகி விடாதே?” என்று சலனப்பட்ட மாமாவிடம் தெளிவாக விளக்கினார் ஸ்ரீராமன். 

ஒரு இந்திய வாழ் வரிதாரரிடம் இருந்து சொத்து வாங்குவதை விட ஒரு என் ஆர் ஐயிடம்சொத்து வாங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு அசையா சொத்தை வாங்கும் போது, இரண்டு விதிகளை தெளிவாக கருத்தில் கொள்ள வேண்டும். 

ஒன்று வருமான வரிப் பிரிவு 194IAன் படி ஒரு இந்திய வாழ் வரிதாரரிடம் இருந்து சொத்து வாங்கும் போது, சொத்தின் மதிப்பு ரூ.50,00,000க்கு மேல் இருந்தால் 1% வரியை கழித்து வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும். வரியை செலுத்த வரிக் கழிப்பு எண், அதாவது டேன் (TAN) தேவை இல்லை. 

உதாரணத்திற்கு வீட்டின் விலை ரூ. 70,00,000 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். வீட்டை வாங்குபவர் 1% அதாவது ரூ.70,000யை கழித்துவிட்டு ரூ.69,30,000 மட்டும் விற்பவருக்கு செலுத்திவிட்டு ரூ.70,000த்தை அடுத்த மாதம் 7ம் தேதிக்குள் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும். 26QB என்ற படிவத்தை https://onlineservices.tin.nsdl.com/etaxnew/tdsnontds.jsp என்ற வலைத்தளத்தில் பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். கழிக்கப்பட்ட வரியை இணையதளம் மூலமாக மட்டுமே செலுத்த முடியும். 26QBயை தாக்கல் செய்த பின் 16B என்ற படிவத்தை www.tdscpc.gov.in என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விற்பனையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இதை அவர் தான் செலுத்த வேண்டிய வரியிலிருந்து கழித்துக்கொள்ளலாம். 

ஒரு என்ஆர்ஐயிடம் அசையாச் சொத்து வாங்கும்போது 194IA வில் கூறப்பட்டுள்ள வரி விகிதம் செல்லாது. 195 விதிப்படி 20% வரியை கழித்து வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும்.

முன்பே எடுத்தது போல், வீட்டின் விலை ரூ. 70,00,000 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். விற்பவர் என்ஆர்ஐ ஆக இருக்கும்பட்சத்தில், 20%,  அதாவது ரூ.14,00,000 வரியை கழித்து பாக்கி ரூ.56,00,000 லட்சத்தை மட்டும் அவருக்கு செலுத்திவிட்டு, மீதம் ரூ.14,00,000த்தை வரித்துறைக்கு செலுத்த வேண்டும். 27Q என்ற படிவத்தை https://onlineservices.tin.nsdl.com/etaxnew/tdsnontds.jsp என்ற வலைத்தளத்தில் பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும். கழிக்கப்பட்ட வரியை இணையதளம் மூலமாக மட்டுமே செலுத்த முடியும். 27Qயை தாக்கல் செய்த பின் 16A என்ற படிவத்தை www.tdscpc.gov.in என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விற்பனையாளரிடம் 15 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். 

“இவ்வளவு வேலை செய்தே ஆக வேண்டுமா மாப்ளே? கட்டாமல் விட்டா என்ன தான் ஆயிடப் போரது? “ என்றவரிடம், “விற்பனை செய்யும் என்ஆர்ஐயிடம் வரி குறைவாகவோ அல்லது கழிக்காமல் இருக்கவோ ஒரு சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த சான்றிதழை வழங்கும் அதிகாரம் வருமானத் துறைக்கு மட்டுமே உள்ளது. எனவே அவர்கள் கொடுத்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே வரியை குறைவாகவோ கழிக்காமலோ இருக்க முடியும். அவ்வாறு இல்லாமல் வரியை கழிக்காமலோ. கழித்த வரியை செலுத்தாமல் விட்டாலோ, விற்பனை செய்தவர் கட்ட வேண்டிய அனைத்து வரியும் வாங்குபவரிடமிருந்து தான் மீட்கப்படும் என்றதும் முழித்துக் கொண்டார் வெங்கட்ராமன்.

வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை செய்து பார் என்பதைப்போல், என்ஆர்ஐயிடம் வீட்டை வாங்கிப்பார் என்றும் சேர்த்துவிடலாம் போல இருக்கிறதே என்று சலித்துக் கொண்டேவிற்பனை பத்திரங்களை தயார் செய்யும் வேலையில் இறங்கினார். 

(இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.)

Can an NRI get loan for purchase of a house in India?

NRI வீடு வாங்க கடன் பெற முடியுமா?
-    ஆடிட்டர் G. கார்த்திகேயன், கோவை

துபாயில் வசிக்கும் கணேஷ் பாண்டே எஃஸ்போர்ட் தொழிலில் கலக்கி கொண்டிருந்தார். தன் மகன் மற்றும் மனைவியுடன் துபாயிலேயே செட்டில் ஆகியிருந்த அவர் மகனை ஆடிட்டர் படிப்பிற்காக சென்னை அனுப்ப முடிவு செய்தார். மகனுடன் சென்னைப் புறப்பட்டார். காலை 6 மணிக்கு கையில் புத்தகத்தோடு சிட்டாகப் பறந்த வாலிபர்களை பார்த்த கணேஷுக்கு ஆச்சரியமாக இருந்தது. கார் டிரைவரிடம் “நம்ம ஊர் பசங்களா பா இது?” என்றார். “ஆமாம் சார், மைலாப்பூர் காலைல எப்பவுமே இப்படி தான். நம்ம தம்பியும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் இப்படித்தான் இருபாரு” என்றார். பிள்ளை எப்படியும் ஆடிட்டர் ஆகி விடுவான் என்ற நம்பிக்கை இன்னும் கொஞ்சம் அதிகமானது கணேஷுக்கு. துபாயில் ஜாலியாக இருந்தோமே இனி தூக்கமே கெட்டது என்று மனசுக்குள் அலுத்துக் கொண்டான் மகன். ஊருக்குள் சென்றதில் சொல்லிக்கொள்ளும்படி சில மால்களும் கடற்கறையும் இருந்ததால் சரி எப்படியாவது ஓட்டி விடலாம் என்று யோசித்துக்கொண்டான்.   எப்படியாவது  பல இடங்களில் விசாரித்து ஒரு நல்ல கல்வி நிறுவனத்தில் சேர்த்தார். முதலில் மகனை விடுதியில் விட முடிவெடுத்தவர் அவற்றை பார்த்ததும் அந்த நினைப்பை அறவே அகற்றிவிட்டார். தீர விசாரித்ததில் சென்னையில் வீடுகள் அவர் நினைத்ததை விட மலிவான விலையில் கிடைப்பது தெரிய வந்தது. டாலர் விலையும் ஏறியிருக்கும் நிலையில் ஆகட்டும் என்று ஒரு வீட்டை வாங்கி விடலாம் என்று முடிவெடுத்தார்.


தரகரிடம் விசாரித்ததில் 4 கோடிக்கு ஒரு அருமையான வீடு இருப்பதை அறிந்தார். பார்த்ததும் பிடித்துவிடும் அழகான வீடு. வாட்சாப்பில் மனைவிக்கு சில போட்டோக்களை தட்டி விட்டார். “ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்போதான் ஒரு உறுப்படியான காரியம் செய்திருக்கீங்க” என்று கட்டை விரல் உயர்த்தினார் அவர் மனைவி. இங்கே ஹோம் தியேட்டர், அங்கே பாஸ்கெட் பால் கூடை என அடுக்கிக்கொண்டிருந்தான் மகன். “படித்து விடுவாயா டா?” என்று சிரித்துக்கொண்டே கண்டித்தார் அப்பா. “நான் உங்க பையன் அப்பா! கலக்கி விடலாம்” என்றார். “என் சந்தேகமே அதுனால தான்” என்று ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டனர். 

தன் வங்கி மேனேஜரை அழைத்து வீட்டுக் கடனுக்கான நடைமுறைகளைப் பற்றி விசாரித்தார். அவர் கூறியதாவது, கவலையை விடுங்க சார் இப்போதெல்லாம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கடன் பெறுவது பிரம்ம ப்ரயத்தனம் இல்லை. மிக எளிதாக குறைந்த செயலாக்க நேரத்தில் கடன் பெற்று விடலாம். சுய தொழில் செய்பவராக இருப்பின் குறைந்தது 3 ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை பொதுவாக வங்கிகளில் இருக்கிறது. ஒருவருடைய ஆண்டு வருமானத்தில் 4 மடங்கு வரை வீட்டுக் கடன் வழங்க வங்கிகள் முன்வருகின்றன. ஆனால் NRE/ FCNR கணக்குகளுக்கு எதிராக 1 கோடி ருபாய் வரை மட்டுமே கடன் அளிக்க முடியும் என்ற விதி FEMA சட்டத்தில் உள்ளது. உங்கள் ஆண்டு வருமானம் 50 லட்சம் என்பதால் 2 கோடி வரை எங்கள் வங்கி உங்களுக்கு கடன் அளிக்க முடியும். கடன் விண்ணப்பப் படிவத்தோடு, பாஸ்போர்ட், விசா, வெளிநாட்டி ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இன்னும் 2 கோடியை சேமிப்புகளிலிருந்து எடுக்க வேண்டுமே என்று கவலை கொண்டார் கணேஷ். வீட்டை விட மனசில்லாததால், சரி என மனைவியும் ஒப்புக்கொண்டார். 

நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில், “இவ்வளவு பெரிய வீட்டில் பிள்ளையை தனியா விட வேண்டாமே கணேஷ். என் தம்பியும் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கிறான். ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டு விடு. மேல் தளத்தில் உன் பையன் தங்கிக்கொள்ளட்டும். அவன் வந்துவிட்டால் உன் மகனுக்கு சாப்பாட்டுக்கும் பிரச்சனை இல்லாமல் இருக்கும். பையனுக்கு படிப்பு செலவிற்கும், வங்கிக்கு வட்டி செலுத்தவும் பயன்படும்தானே” என்றார். “அது போக, வரிப்படிவத்தில், வரும் வாடகையிலிருந்து வங்கிக்கு கட்டும் வட்டியையும் கழித்துக்கொள்ளலாம். 30% வாடகையும் கழிந்துவிடும். துபாயில்தான் வரியில்லையே! யோசிக்காமல் தலையை ஆட்டிவிடு” என்றார். அவர் சொல்வதும் சரியாகத்தான் தோன்றியது.   பணம் இவ்வளவு விரைவாய் கிடைத்ததே ஒரு நல்ல சகுனமாய் பட்டது, அதோடு மகனை ஒரு அழகான சௌகரியமான வீட்டில் அமர்த்திவிட்ட நிம்மதியுடன் வீட்டை அடுத்த மூன்று மாதத்தில் வாங்கி துபாய் திரும்பினார் கணேஷ் பாண்டே.        

(இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.) 

Can an NRI utilise Indian shares to take loans?

என்ஆர்ஐ இந்தியப் பங்குகளை வைத்து கடன் வாங்க முடியுமா?

ஆடிட்டர் ஜீ. கார்த்திகேயன்
பன்னாட்டு வரி ஆலோசகர், கோவை

  
கோபி, பல ஆண்டுகளுக்கு முன்னரே ஜெர்மனிக்குக் குடிபெயர்ந்தவர். உங்களது பெயர் என்ன என்று நண்பர்கள் கேட்டால் சுருக்கமாக “ஸ்ரீதர வேணு கோபால கிருஷ்ணன்” என்று தனது பெற்றோர்கள் வைத்த பெயரைக் கூறுவார். ஜெர்மன் மொழியின் தாக்கத்தில் கட்டுப்பட்டு அங்கேப் படிக்கச் சென்றவர், தராசு சம்பந்தமாக தொழிலில் ஈடுப்பட்டு அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.

அவரது தந்தை அவர் பெயரில் பல ஆண்டுகளாக ஷேர்களை வாங்கிக் குவித்தார். கோபியும் தனது தந்தையின் பழக்கத்தால் ஏராளமான ஷேர்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மகள் பிருந்தாவுக்கு திருமணம் செய்து கொடுத்த கோபி அடிக்கடி இந்தியா வந்து செல்ல அரம்பித்தார்.
நல்ல மாப்பிள்ளை, கை நிறைய வருமானம் மிகுந்த மரியாதையுடன் பழகி வந்தார். மும்பையில் இருக்கும் மகள் வாடகை வீட்டில் இருந்து வந்தது கோபியின் மனைவி சித்ராவிற்கு உறுத்தலாகவே இருந்தது. மகளுக்கு மும்பையில் ஒரு வீடு வாங்கித் தருமாறு மனைவி சித்ரா அடிக்கடிக் கூறிவந்தார்.

எதையுமே மனனவி சொல்படி கேட்டு நடக்கும் கோபி மகளுக்கு வீட்டை வாங்கித் தர முடிவு செய்தார்.
10வது மாடியில் காற்றோட்டமான 3 படுக்கை அறைகள் கொண்ட அபார்ட்மென்ட். செம்பூர் ஏரியை ரசித்தபடியே மாலை காப்பி அருந்த வேண்டும், உப்பரிகையிலிருந்து பார்த்தால் முழு நிலா தெரிய வேண்டும், அபார்ட்மென்ட்டைச் சுற்றி தோட்டம், நீச்சல் குளம் என்று மகள் பிருந்தாவிற்கு பல ஆசைகள் இருந்தன. அதை அடிக்கடி தன் தாயிடம் கூறி வந்தார்.
செம்பூரில் மகளுக்குப் பிடித்த வீடு குறைந்தபட்சம் ரூ. 2 கோடி ஆகும் என்று தெரித்த பின் அதன் அதற்கான பணத்தை எப்படி ஏற்பாடு செய்வது என சிந்தித்தார். பல ஆண்டுகளாக வாங்கிய ஷேர்கள் மதிப்பில் உயர்ந்து கணிசமான தொகையைக் எட்டியது. அதற்கு எதிராக கடன் பெற முடியுமா என்று நண்பரிடம் வினாவினார்.

ஒரு அங்கீகரிக்கப்பட்ட டீலர் (Authorized Dealer), என்ஆர்ஐ (NRI) க்கு இந்தியப்பங்குகளுக்கு ஏதிராக கடன் கொடுக்க முடியும். அவ்வாறு கொடுக்கப்பட்ட கடனை தனிப்பட்ட செலவுகளுக்கோ அல்லது தொழில் சம்பந்தமான செலவுகளுக்கோ மட்டுமே பயன்படுத்த முடியும்.

அங்கீகரிக்கப்பட்ட டீலர் என்பது ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவன்ங்களைக் குறிக்கின்றது. தொழில் சம்பந்தமானசெலவுகள் என்பதில் , சீட்டுத் தொழில், நிதி நிறுவனம், பண்ணை வீடு கட்டுதல் மற்றும் வர்த்தக வளர்ச்சி உரிமைகள் (Tradable development rights) சம்பந்தமான தொழில்களில் பயன்படுத்த முடியாது. ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் பங்குகளை வைத்து கடன் பெற முடியாது.

மேலே கூறப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் என்பதில் டவுன்ஷிப் மற்றும் சாலை மற்றும் மேம்பாலக் கட்டமைப்புத் தொழில்கள் பொருந்தாது. அதாவது டவுன்ஷிப் மற்றும் சாலை மற்றும் மேம்பாலக் கட்டமைப்புத் தொழில்கள் நடத்த  இந்தியப் பங்குகளை வைத்து கடன் வாங்க முடியும். 

கோபிக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தன்னிடம் இருக்கும் பங்குகளுக்கு எதிராக ரூ. 1.5 கோடி வரை கடனளிக்க பல வங்கிகள் முன்வந்தன. அதுவே அவருக்கு போதுமானதாகவும் இருந்தது. மனைவியிடம் கூறி ஒப்புதலும் வாங்கி விட்டார்.

ஆனால், அவர் ஜெர்மனியில் இருப்பதால் கடனை எப்படி திரும்பச் செலுத்துவது என்று சந்தேகம் கொண்டார். அவரது பல கேள்விகளுக்கும் அவருடைய மாப்பிள்ளையிடமே பதில் இருந்தது. 

கடன் கொடுக்கும் வங்கி ஒப்புக்கொண்ட கடனை என்ஆர் ஓ (NRO) வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்த முடியும். மற்ற வெளிப்புற கணக்குகளில் (NRE, FCNR) செலுத்த முடியாது. அதே போன்று வாங்கிய கடனை இந்தியாவுக்கு  வெளியில் அடைக்க முடியாது. வெளிநாட்டு வங்கிக் கணக்குகளிருந்து இந்தியாவிற்கு அனுப்பியோ, இந்தியாவிலிருக்கும் என்ஆர்ஓ, என்ஆர்இ, எஃப்சிஎன்ஆர் (NRO, NRE , FCNR) கணக்குகள் மூலமாகவோ அல்லது பாதுகாப்பு ஆவணங்களாக அளித்த பங்குகளை விற்றோ மட்டுமே திருப்பி அடைக்க முடியும் என்றார். 


கோபிக்கு அது பெரிய சிக்கலான விஷயமாக தெரியவில்லை. ஆன்லைனிலேயே விண்ணப்பித்தார். பெரிய முறைபாடுகளின்றி சீக்கிரமே கடன் கிடைத்துவிட்டது.

அடடே! நம் இந்தியா நாம் நினைத்ததை விட வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே! என்று ஆனந்தம் அடைந்தார். வீட்டை பதிவு செய்தார். மகளுக்கும் மறுமகனுக்கும் வீடு மிகவும் பிடித்துவிட்டது. மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜெர்மனி திரும்பினார். 

(இந்த கட்டுரை சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருப்பின், karthikeyan.auditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.)