‘‘சொந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தாலும் வரிச் சலுகை வேண்டும்!’’
ஆடிட்டர். ஜி. கார்த்திகேயன், கோவை.
‘‘வீட்டுக் கடனுக்கான வட்டி தற்போது வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டில் வசித்தால் ரூ.2 லட்சம் வரையிலும், அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை மொத்த வருமானத்தில் இருந்து கழித்து வரிச் சலுகை பெறலாம்.

இனி, வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டில் குடியிருந்தாலும் வரம்பு ஏதும் இல்லாமல் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும்.
வீட்டைக் கடன் வாங்கி கட்டினால் அல்லது வாங்கினால் கட்டுமானக் காலத்தில் வட்டியை தற்போது வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை.
உதாரணமாக, ஒரு ஃப்ளாட் ஒன்றுக்கு முன்பணம் கொடுத்து பதிவு செய்து அந்த ஃப்ளாட் கட்டப்படும் நிலையில் அதற்காக கொடுக்கப்படும் வட்டி வருமானத்தில் இருந்து கழிக்கப்பட அனுமதிக்கப்படு வதில்லை. அந்த ஃப்ளாட் கட்டி முடித்தபின் அதில் குடிபுகுந்த பின்னரே அனுமதிக்கப் படுகிறது.
இது ஃப்ளாட் புக் செய்தபின் வாங்கிய கடனுக்காகக் கொடுக்கப்படும் வட்டியை வருமானத்தில் இருந்து கழிக்க அனுமதிக்க வேண்டும். வீட்டு விற்பனை மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய வருமான வரி சம்பந்தப்பட்ட ஊக்கங்கள் உத்வேகத்தைக்
கொடுக்கும்.
நீண்ட கால மூலதன ஆதாயத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போதும் வரிச் சலுகை வழங்க வேண்டும். இதனால் பங்குச் சந்தை மற்றும் சேமிப்பும் முன்னேற்றமடையும்.
வருமான வரி செலுத்துவோருக்கு கொடுக்கப்படும் வரிக்கான ரீஃபண்ட் உடனடியாக கொடுக்கப்படுவதில்லை என்பது பொது மக்களின் கருத்து. இதற்குக் காரணம், வரிப் பிடித்தம் (TDS) அதிகமாக இருப்பது. ஆகவே, சில வகை பரிவர்த்தனைகளுக்கான
டிடிஎஸ் தொகையைக் குறைக்கலாம்.’’