Monday, 10 August 2015

NRIs & Taxes - an article in Nanayam Vikatan by CA G Karthikeyan FCA

என்ஆர்ஐகளும் வரியும்
3. எந்த வருமானத்துக்கு இந்தியாவில் வரி கட்ட வேண்டும்

ஆடிட்டர் ஜீகார்த்திகேயன்கோவை

கோவை ராம் நகரைச் சேர்ந்த விஸ்வநாதன் குமார்என்கிற வி.குமார் பணி நிமிர்த்தமாக டோஹா சென்றார்.நல்ல சம்பளம்அருமையான சூழல் என்று நன்றாகவேஇருந்ததுஅரபிய கலாச்சாரம்..
 அரேபிய நாடுகளின் வல்லமையும்இந்தியாவின் தேவையையும்அறிந்துதன் நுண்ணறிவால் ஒரு வியாபாரத்தை துவங்கினார்.பணி நேரம் போக மீதமிருந்த நேரத்தில் இந்தியாவிற்கு உரம்சம்பந்தமான ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார்சதா “அறிவுரை”வழங்கி வந்த மனைவிவியாபாரத்ததுக்கு உண்மையாகவே பக்கபலமாக இருக்க ஆரம்பித்தார்நல்ல வரவேற்பு இருந்ததால்குமாருக்கு தொழில் ஆர்வம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேசென்றது அதன் கிளையை மும்பையில் திறக்கவும் திட்டமிட்டார்முதல் வருடத்திலிலேயே வியாபாரம் நல்ல லாபம் ஈட்டியது.வீட்டில் அனைவருக்கும் ஒரே பெருமை. அரேபிய வியாபாரச் சூழல் சற்று புதியதாக இருந்ததால் வருடத்தின்பெரும்பான்மையான நாட்கள் டோஹாவிலும் மாதம் நான்கு நாள் இந்தியாவிலும் இருந்தார்.

டோஹாவில் சம்பளம் மட்டுமே பெற்று வந்த குமாருக்கு தற்போது வியாபார வருமானம்வட்டிஈவுத் தொகை (Dividend),வீட்டு வாடகை என்று பல தரப்பட்ட பண வரவுகள் இருந்தனஅதில் எதை எல்லாம் இந்திய வரிப் படிவங்களில் காண்பிப்பதுஎன்று குழம்பிப் போனார்.
எந்த ஒரு வரிதாரரின் வருமானமும் ஐந்து தலைப்புகளுக்குள் வந்துவிடும்.  அவை,

  •  சம்பளம்
  •  வீட்டு வாடகை
  •  தொழில் வருமானம்
  • மூலதன ஆதாயம் (கேப்பிடல் கெய்ன்)
  • இதர வருமானம்
    சம்பளம்:
சம்பள வருமானம் என்ற தலைப்பினுள் முதலாளி தொழிலாளி (Employer – Employee)தொடர்புடைய எந்த ஒரு சன்மானமும் அடங்கிவிடும்சில நேரங்களில் மிக சாதரணமாகதெரிந்தாலும் அதிகம் குழப்பும் தலைப்பு இது தான்உதாரணத்திற்கு உங்கள் முதலாளி ரூ.10,000போனஸ் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்அதோடு மட்டுமின்றி ஆபிஸ்செலவுக்காக ரூ.20,000மும் தன் கையிலிருந்து உங்கள் சுய செலவுக்காக ரூ.10,000மும் தினமும்உபயோகிக்க ஒரு ஆபிஸ் காரும் கொடுத்திருக்கிறார்.
மாதம் உங்களுக்கு ரூ.70,000 சம்பளம்மேலே குறிப்பிட்ட வருமானங்களில் எவை எல்லாம்சம்பளத்தினுள் வரும் எனக் காண்போம்.
  • போனஸ்: போனஸ் தருவதில் முதலாளி-தொழிலாளி தொடர்பு இருக்கிறதுஎனவே ரூ.10,000சம்பள வருமானமாகத் தான் எடுத்துக் கொள்ளப்படும்.

ஆபிஸ் செலவுக்கான பணம்: ஆபிஸ் செலவுக்காக உங்களுக்கு அளிக்கப்பட்ட பணத்தை நீங்கள்சொந்த செலவுக்காக பயன்படுத்தாத வரையில் அது எந்த தலைப்பிலும் வருமானமாககருதப்படாது.

  • முதலாளி தன் கையிலிருந்து அளித்த பணம்: என்னதான் முதலாளி ஆக இருந்தாலும் தன்சொந்த பணத்தை உங்கள் சொந்த செலவுக்காக அளிப்பது முதலாளி தொழிலாளி தொடர்புக்குஅப்பாற்பட்டதுஅது சமபளம் என்ற தலைப்பின் அடியில் வராதுஇதர வருமானங்களுக்குள்கிஃப்ட் (Gift) ஆக கருதப்படும்.
  • ஆபிஸ் கார்: ஆபிஸ் கார் நீங்கள் அதை எதற்காக பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்துவரிக்கு உட்படுத்தப்படும் தொகை மாறும்எந்த ஒரு ஆபிஸ் சொத்தையும்விலைமலிவாகவோ விலையில்லாமலோ பெற்று அல்லது உபயோகிக்கும்பட்சத்தில் அதிலிருந்துபெறும் சுய லாபத்தை பொறுத்து வரிக்குட்படுத்தப்படும் தொகை மாறும்அதன் செயல்முறைக்குள் ஆழமாக வேறு தொடரில் செல்வோம்மொத்தத்தில் ஆபிஸ் காரைபயன்படுத்துவதில் சம்பள வருமானம் அதிகரிக்கும்அதை Perquisites என்பர்.
  • சம்பளம்: சொல்லவே வேண்டியதில்லை சம்பள வருமானமே தான்!.
சம்பள வருமானத்தை நம் நாயகன் குமார் டோஹாவில் பெறுகிறார்ஆனால் அதைஅவர் இந்திய வரிப் படிவங்களில் காட்ட வேண்டுமாமாதம் நாட்களே இந்தியாவில்இருந்ததால் குமார் Non-Resident ஆக கருதப்படுவார்எனவேஇந்தியா அல்லாது வேறுஎந்த நாட்டில் பெறும் எந்த தொகையையும் அவர் இந்திய வரிப் படிவத்தில் காண்பிக்கவேண்டாம்.

வீட்டு வாடகை:

வீட்டு வாடகை என்ற தலைப்பினுள் வீடு மட்டுமன்றிஷாப்பிங் காம்பளக்ஸ்குடோன் என்றுவாடகைக்கு விட்ட அனைத்து இடங்களும் அடங்கிவிடும்வாடகை வருமானத்திலுருந்து 30%-யை அப்படியே கழித்துக் கொள்ளலாம்அது போகசொத்து வரியையும் வீட்டிற்கு கடன் வாங்கிவட்டி செலுத்தும் பட்சத்தில் 24b யின் படி வட்டி பணத்தையும் கழித்து கொள்ளலாம்சொந்தவீட்டிற்கு மட்டும் வட்டிக்கு உட்சவரம்புகள் உள்ளன.
அவை வாடகை பெறும் சொத்துகளுக்கு பொருந்தாதுஉதாரணத்திற்கு நீங்கள் சொந்த வீட்டில்இருக்கிறீர்கள்அதற்கான சொத்து வரி  ரூ.8,900. கடனுக்கான வட்டி ரூ.1,75,450. அதே வீட்டைவாடகைக்கு விடுகிறீர்கள் ரூ.20,000 (மாதம்சொத்து வரிவட்டி அனைத்தும் அதே தொகைஇரண்டிற்குமான வேறுபாட்டை கீழே காண்க.

சொந்த வீடு
வாடகை
விடப்பட்டது
வாடகை வருமானம்
-
2,40,000
சொத்து வரி



24a
30% கழிப்பு


24b- வட்டி

நஷ்டம்
வரி கழிக்க முடியாது
(8,900)

-

-
2,31,000

(69,330)


1,50,000 (உச்ச வரம்பு)
1,61,770

(1,75,450)
(1,50,000)
(13,680)

வாடகை வருவாயில்இந்தியாவில் இருக்கும் சொத்துகளுக்கான வருவாயை மட்டும் ஒரு Non-Resident வரிப் படிவங்களில் காண்பித்தால் போதுமானதுவாடகை ரூ.1,00,000 மேல் இருந்தால்குடியிருப்பவரின் PAN மற்றும் பெயரைக் குறிப்பிட வேண்டும்ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்உரிமையேற்ற சொத்தாக இருக்கும் பட்சத்தில் வாடகையை Ownership Share பொறுத்து பிரிக்கவேண்டும். 24b வட்டியை யார் செலுத்துகிறாரோ அவர் கழித்து கொள்ளலாம்.
இதர வருமானம்:
இதர வருமானம் என்பது வேறு எந்த தலைப்பிலும் இடம் பெறாத அனைத்துவருமானங்களையும் அடக்கி வரும் (அம்புஜத்தின் ஆத்துகாரர் வாங்கிய கிம்பளம் உட்பட).வட்டிஈவுத்தொகைகிஃப்ட்குழந்தைகளின் வருமானம்(Clubbing), லாட்டரிபோட்டிகளில்வென்ற பொருட்கள்/பணம் என அனைத்தையும் இதர வருமானத்தில் சேர்த்து விடலாம்இதரவருமானத்தில் சில ஒரு குறிப்பிட்ட சதவிகித வரியையும்மற்றவை சாதாரணமாக அடிப்படைவரி விகித (Slab rate) முறையிலும் வரிக்குட்படுத்தப்படும்இதில் ஈவுத்தொகைஇந்தியகம்பெனிகளிலிருந்து பெற்றிருந்தால் அவை வரிவிலக்கு ஆக கருதப்படும்இதில் கருத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்நீங்கள் வெளிநாட்டு குடியாளராக இருந்தால் இதேஈவுத்தொகைஅங்கே வரிக்குட்படுத்தப்படலாம்எனவே பங்குகளில் முதலீடு செய்வதற்குமுன் இரு நாட்டு வரி விதிகளையும் ஆராய்வதே சிறப்பாக இருக்கும்இதர வருமானத்தைபொறுத்த வரையில் வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லைஇந்தியாவிலிருந்து பெற்றவருமானத்தை மட்டும் வரிப்படி வங்கிகளில் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் காண்பித்தால்போதுமானது.
அடடேவியாபார வருமானத்தையும் மூலதன ஆதாயத்தையும் விட்டு விட்டோமோ!
அடுத்த வாரத்தில்...
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10321

No comments:

Post a Comment