6. என்ஆர்ஐகளும் வரியும்
இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம்
- ஆடிட்டர் G. கார்த்திகேயன். கோவை
பாலக்காடு பால விஸ்வநாதன் முன்னணி தனியார் கம்பெனியில் மூத்த அதிகாரியாகப் பணிப்புரிந்து வருகிறார். மார்க்கெட்டில் அவரது பணித் திறமையைப் பாராட்டி கம்பெனி நிர்வாகம் அவரை ஜெர்மனி நாட்டில் திறக்கப்படும் அவர்களது புதிய கிளைக்கு “குறுகிய கால” அடிப்படையில் அனுப்ப முடிவு செய்தனர். ஓர் ஆண்டு காலம் இந்த வெளிநாட்டு நியமனம். அடிக்கடி ஊர் சுற்றும் பாலாவுக்கு ஒரே சந்தோசம்.
அனைத்திலும் அதிக ஆர்வம் காட்டும் பாலாவைத் தனியே வெளிநாடு அனுப்புவதில் மனைவி ராஜிக்கு சற்றே தயக்கம்தான். இருப்பினும் ஜெர்மனி கட்டுப்பாடான நாடு என்கிற காரணத்தாலும் ஆண்டு முடிவில் ஸ்விட்சர்லாந்துக்கு குடும்பத்துடன் செல்லலாம் என்று கம்பெனி கூறியதாலும் பாலாவுக்கு வீட்டில் அனுமதி கிடைத்தது.
மீண்டும் பிரம்மச்சாரியாக வெளிநாடு சுற்றலாம் என்று ஏகப்பட்ட குஷியில் இருந்த பாலாவுக்கு வருமான வரி குறித்து கவலை ஏற்பட்டது. ஏற்கனவே லகரத்தில் வரி கட்டி வரும் பாலா இது குறித்து நீண்ட ஆலோசனைகளை செய்ய ஆரம்பித்தார்.
ஆடிட்டர் G. கார்த்திகேயன். கோவை
ஆடிட்டர் G. கார்த்திகேயன். கோவை
ஜெர்மனி நாட்டில் கொடுக்கப்படும் சம்பளத்திற்கு அங்கேயும் வரிப் பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் அறிந்தார். மேலும் இந்தியாவில் கொடுக்கப்படும் சம்பளத்திற்கு இந்தியாவில் வரிப் பிடித்தம் (TDS) செய்யப்பட்டு வருகிறது. பாலா இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 183 நாட்களுக்கு மேல் தங்கியிருப்பதால் இந்திய குடியாளராக (resident) கருதப்படுவார். எந்த நாட்டிலும் குடியாளராக (resident) இருப்பதால் உலக அளவிய வருமானத்திற்கு வரி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
நம் முதல் தொடரில் கண்டதன்படி வருமான வரி சட்டத்தில் வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்து ஒருவர் இந்தியாவில் தங்கிய நாட்களை வைத்து கணக்கிடப்படுகிறது. அதன்படி முந்தைய நிதி ஆண்டில்,
182 க்கும் குறைவான நாட்கள். (அல்லது)\
முந்தைய நிதி ஆண்டில் 60 நாட்கள் (மற்றும்) முந்தைய நான்கு நிதி ஆண்டுகளில் 365க்கும் குறைவான நாட்கள்
இந்தியாவில் தங்கியிருந்தால், அவர் வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்தை பெறுவார்.
இதற்கான விதிவிலக்குகள், இந்திய கப்பல் குழுவில் உறுப்பினராக அல்லது வெளிநாட்டில் வேலைவாய்ப்பு காரணமாக அல்லது இந்திய வம்சாவளியினராக (PIO) இருந்தால், (2)ம் விதி, முந்தைய நிதி ஆண்டில் 182விட குறைவாக நாட்கள் மற்றும் முந்தைய நான்கு நிதி ஆண்டுகளில் 365 நாட்களுக்கும் குறைவான நாட்கள் தங்கி இருந்தால் வெளிநாட்டு வரிதாரர் என்ற அந்தஸ்தை பெறுவார்.
குடியாளர் அந்தஸ்துக்கேற்ப வரிக்கு உட்படுத்தப்படும் வருமானம் மாறுபடும். ஒருவர் இந்தியகுடியாளராக (Indian Resident) தகுதி பெருவாராயின், அவருடைய அனைத்துவருமானங்களும் இந்தியாவில் வரிக்குட்படுத்தப்படும். அதாவது நம் பாலா ஜெர்மனியில்வாங்கிய சம்பளம் முழுவதும் இந்தியாவில் வரிக்குட்படுத்தப்படும்.
ஆனால் இந்தியாவிற்கு பல நாடுகளுடன் இரட்டை வரித்தவிர்ப்பு ஒப்பந்தங்கள் உண்டு.அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, பின்லாந்து, டென்மார்க்,மலேஷியா, மாலத்தீவு , பிலிப்ஃபைன்ஸ், இலங்கை, ஸ்வீடன், ஜப்பான் என இரட்டை வரி ஒப்பந்தப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அடிப்படையில் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் என்பது ஒரே வருமானத்திற்கு இரு நாடுகளில்வரி செலுத்துவதை தவிர்ப்பது குறித்ததாகும். இதன் படி ஒரே வருமானத்திற்கு இரண்டு நாடுகளில்வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் எந்த நாட்டில் குடியாளராக வரி செலுத்துகிறாறோஅங்கு மற்ற நாட்டில் பிடித்த வரித் தொகைக்கு கிரடிட் (Credit) எடுத்துக்கொள்ள முடியும்.
உதாரணமாக, பாலா இந்தியாவில் ஏப்ரல் 2015 முதல் நவம்பர் 2015 வரை சம்பளம் பெற்று வருகிறார்.அவர் டிசம்பர் 2015 முதல் மார்ச் 2016 வரை ஜெர்மனியில் தங்கி அங்கு சம்பளம் பெறுகிறார் என்றுவைத்துக்கொள்ளலாம். மேலே கூறிய கணக்குப்படி அவருக்கு இந்தியாவில் வருமானவரிச்சட்டத்தில் ரெசிடன்ட் அந்தஸ்து இருக்கும். அதாவது உலக வருமானம் அனைத்திற்கும் இந்தியவருமானத்தில் காட்ட வேண்டும்.
உதாரணத்திற்கு
காலம்
|
வருமானம்
|
வரிப் பிடித்தம்
| |
இந்தியாவில்
|
ஏப்ரல் 2015 - நவம்பர் 2015
|
16 லட்சம்
|
2.10 லட்சம்
|
ஜெர்மனியில்
|
டிசம்பர் 2015 - மார்ச் 2016
|
20 லட்சம்
|
4.00 லட்சம்
|
மொத்த வருமானம்
|
36 லட்சம்
|
இந்தியாவில் மொத்த வருமானமான 36 லட்சத்திற்கும் வரிக்கட்ட வேண்டும். இதற்கான வரி 11.10லட்சம் வரிக்கட்ட வேண்டும். ஆனால் ஜெர்மனியில் வரிப்பிடித்தம் செய்த 4 லட்சத்தை 11.10-த்திலிருந்து கழித்து 7.10 லட்சத்திற்கு மட்டும் வரி செலுத்தினால் போதுமானது. இதுதான் இரட்டைவரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் தாத்பரியம்.
இது தெரிந்தபின் சற்றே நிம்மதியாக ஜெர்மனி கிளம்ப தயாரானார் பாலா.
(Karthikeyan.auditor@gmail.com)
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10449